Advertisement

ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் நன்றி

Share
சென்னை: 'ஜப்பான் கப்பலில் தவிக்கும் இந்திய பயணியருக்கு தேவையான அனைத்து உதவிகள் வழங்கப்படுகின்றன' என, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த தகவலுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நன்றி தெரிவித்துள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறிஇருப்பதாவது: ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள, 'டைமாண்ட் பிரின்சஸ்' கப்பலில் வந்த தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினேன்.

அவர் அளித்த பதிலில், 'கப்பலில் உள்ள பயணியர் குழுவினருடன், டோக்கியோவில் உள்ள இந்திய துாதரகம் இடைவிடாது தொடர்பில் உள்ளது. இந்திய பயணியருக்கு தேவையான அனைத்து உதவி மற்றும் ஆதரவும் வழங்கப்பட்டு வருகின்றன' என, கூறியுள்ளார். இந்த தகவலை தெரிவித்த ஜெய்சங்கருக்கு நன்றி.

இந்திய துாதரக அதிகாரிகள், கப்பலில் உள்ள பயணியர் மற்றும் ஊழியர்களுக்கு தேவையான, அனைத்து சட்ட மற்றும் மருத்துவ உதவிகளையும் செய்ய வேண்டும். கப்பலில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு, அங்குள்ள தகவல்களை, அவ்வப்போது தெரிவிப்பர் என, நம்புகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

சொன்னது என்னாச்சு?'டுவிட்டர்' பக்கத்தில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: மூன்றாண்டுகளில், 2000க்கும் மேலான, 'டாஸ்மாக்' கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும், 200 கடைகள் திறக்கப்பட உள்ளன. படிப்படியாக, மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற, வாக்குறுதி என்ன ஆனது? சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும், சொல்வது ஒன்று; செய்வது வேறு என, அ.தி.மு.க., போட்டு வரும் இரட்டை வேடம் இது. இவ்வாறு, கூறியுள்ளார்.

த.மா.கா., மீது வாசன் பாய்ச்சல்த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை:முதல்வர் இ.பி.எஸ்., அறிவிப்பான, பாதுகாக்கப்பட்ட டெல்டா வேளாண் மண்டலத்திற்கும், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கும், தொடர்ந்து, ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது, விவசாயிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனுக்கு எதிரான போக்கையே காட்டுகிறது.

தமிழக மக்கள் நலன் காக்க வேண்டும் என, ஸ்டாலின் உண்மையாக நினைத்தால், ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட்டு, நியாயமாக குரல் கொடுத்து, எதிர்க்கட்சி எப்படி செயல்பட வேண்டுமோ, அப்படி செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (17)

 • JSS - Nassau,பெர்முடா

  இவருடைய நன்றிக்காகத்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏங்கி கொண்டிருந்தார். நன்றி வந்துவிட்டது. அப்படி இனி நிம்மதி அடைவார் இந்த அழகில் முதலமைச்சர் ஆகவேண்டுமாம். தமிழகத்தின் தலை எழுத்து. எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் தமிழகத்தை.

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  திமுக ஆட்ச்சிக்குவந்தால் டோர் டு டோர் சரக்கு பிரீயாவே அளிக்கப்படும் என்றும் சொல்றாங்களே உண்மையா , ??????சாமி . உங்கப்பா தான் கொண்டாந்தாரு மக்களை நாசமாக்கி பொண்ணுகளை விதவையாகவும் வாழாவெட்டிகளாவும் ஆக்கிட்டு தான் மாட்டும் பலதாரம்களோடோ குஷியா இருந்துட்டுபூட்டாக நீங்கல்லாம் கூட தீர்த்தம் இல்லாது இருக்கமாட்டேங்க என்று சொல்றாங்க நான் சொல்லலீங்க பிகாஸ் நான் பாக்கலேயே ஆனால் ஓட்டுபோட்ரஜனும் போதையே சாவுறானுக அவனுகலபொண்டாட்டிகளைப்பிள்ளைக்குட்டிகள் நிலைமை என்னன்னுதெரியுமோ ?உமக்கெல்லாம் தேவை வோட்டு படிச்சவன் போற்றாதே இல்லீங்க அவன் ஓட்டையும் எந்த பன்னாடையோ போட்டுட்டுப்போயினனேஇருக்கான

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இவரு யாரு நன்றி சொல்ல? சம்மன் இல்லாமல் ஆஜராகிறார். வேறு வேலை இல்லை போலும்

 • Abdul Rahman - Madurai,இந்தியா

  போ

 • Jaya Ram - madurai,இந்தியா

  அவரே இருளடித்து போயிருக்கிறார் வேளாண்மண்டலம் என்று முதல்வர் கூறியவுடன் டெல்டா வில் என்ன பிரச்சினையினை கையிலெடுத்து போராடுவது என்ற நோக்கில் இருக்கிறார் , மேலும் CAA. NPR. போன்ற திட்டங்களின் மூலம் போராட்டங்களை தன்னுடைய கைகுருவிகள் மூலம் தீவிரமாக்கி அதன் மூலம் குளிர் காய நினைக்கிறார் இதுலே போய் அவரை கலாய்ச்சிகிட்டு இருந்தால் அவர் மூட் அவுட்டாக மாட்டார் ?

Advertisement