Advertisement

கெஜ்ரி பதவியேற்பு: பிரதமர் மோடிக்கு அழைப்பு

புதுடில்லி: டில்லி முதல்வராக, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கும் விழாவுக்கு, அரசியல் கட்சி தலைவர்களுக்கோ, மாநில முதல்வர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படாது என்றும், டில்லியைச் சேர்ந்த சமானிய மக்கள் மட்டுமே இதில் பங்கேற்கவுள்ளதாகவும், கட்சி மேலிடம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று (பிப்.,14) பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு, கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

படுதோல்வி:டில்லியில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. மொத்தம் உள்ள, 70 தொகுதிகளில், அந்த கட்சி, 62 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, பா.ஜ., எட்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பல ஆண்டுகளாக, டில்லியை ஆண்ட காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது.

டில்லி முதல்வராக, அரவிந்த் கெஜ்ரிவால், நாளை மறுநாள் (பிப்.,16) மீண்டும் பதவியேற்கிறார்; அவரது அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். இதற்காக, டில்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் பங்கேற்க, நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும், பல மாநிலங்களின் முதல்வர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

குறிப்பாக, எதிர்க்கட்சி ஆட்சி நடக்கும் மாநிலங்களின் முதல்வர்கள், இந்த விழாவில் பங்கேற்கஉள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சாமானியர்களின் ஆட்சி:இது குறித்து, ஆம் ஆத்மி கட்சியின் டில்லி மாநில ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய், நேற்று கூறியதாவது: ஆம் ஆத்மி, சாமானியர்களின் ஆட்சி. கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்கும் விழா, முழுக்க முழுக்க டில்லி மக்கள் தொடர்புடையது. இதில், டில்லி மக்கள் தான் பங்கேற்கஉள்ளனர். அவர்கள் முன்னிலையில் தான், இந்த பதவியேற்பு விழா நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க, எந்த அரசியல் கட்சி தலைவர் களுக்கும் அழைப்பு அனுப்பப்படாது. வேறு எந்த மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு அனுப்பும் எண்ணம் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் இந்த திடீர் அறிவிப்பு காரணமாக, பதவியேற்பு விழாவுக்கு சென்று, தங்கள் செல்வாக்கை காட்ட விரும்பிய எதிர்க்கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இருப்பினும் நாட்டின் பிரதமர் என்ற முறையில் மோடிக்கு மட்டும் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

24 மணி நேரத்தில் 10 லட்சம் உறுப்பினர்கள்:ஆம் ஆத்மி கட்சி மேலிடம், சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' கூறியுள்ளதாவது: டில்லி சட்டசபை தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி எதிரொலியாக, முடிவுகள் வந்த அடுத்த, 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் இருந்து, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைக்கு அழைப்பு!
டில்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி வெற்றி பெற்றதும், டில்லியில் உள்ள கட்சி அலுவலகம் முன், ஏராளமான தொண்டர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர். அப்போது, கெஜ்ரிவால் போலவே, தொப்பி, மப்ளர் மற்றும் உடையணிந்து, ஒட்டு மீசை வைத்த, 1 வயதான ஆண் குழந்தை, அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. ஆம் ஆத்மி தொண்டரான ராகுல் தோமரின் மகன், ஆவயன் தோமர் தான், அந்த குழந்தை என, தெரியவந்தது. இந்நிலையில், கெஜ்ரிவால் முதல்வராக பதவி யேற்கும் விழாவுக்கு, அந்த குழந்தைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  கெஜ்ரி பதவியேற்பு: பிரதமர் மோடிக்கு அழைப்பு..அரசியல் நாகரிகம்..இதோடு மத்திய அரசு ஆதரவு இல்லாமல் டெல்லியில் ஒன்னும் பெருசா செய்ய முடியாது..விவேகத்துடன் கெஜ்ரிவால் செயல் படுகிறார் ..

 • அருணா -

  டில்லி முதல்வரின் முடிவு பல லட்சம் ரூபாய் செலவுகளை குறைக்கும். அது நடுத்தற மக்கள் வசதிக்கு போகட்டுமே.

 • blocked user - blocked,மயோட்

  சுடலைக்கு அழைப்பு இல்லையா? என்ன ஒரு கொடுமை... முதல்வராகத்தான் முடியவில்லை... குறைந்தபட்சம் முதல்வர் பதவியேற்பதையாவது பார்க்கும் பாக்கியம் கிடைக்கவேண்டும்...

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   கெஜ்ரிவால் ஸ்டாலினைக் கூப்பிட யோசிச்சாராம்... ஆனா அவர் ஜப்பானிலே இருந்தாலும் இருப்பார்.. அங்கேயே, வைரல் காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கையா யாரையும் வெளியே விடலைன்னு தெரிஞ்சவுடன், அழைக்கும் எண்ணத்தை கைவிட்டுட்டாராம்..

  • Anand - chennai,இந்தியா

   ஏற்கனவே குழம்பியிருக்கும் சூசைக்கு இந்த செய்தி மயக்க நிலைக்கு கொண்டு சென்றுவிடும். இதற்காகத்தான் வாழ்த்தினாயா நொந்தகுமாரா...

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  நல்ல முடிவு. திருந்தபார்க்கிறார். திருந்தட்டும். யாரையும் பகைத்துக்கொள்ளவேண்டாமே

Advertisement