Advertisement

எஸ்.ஆர்.எம்., பல்கலையில் கருத்தரங்கம்

செங்கல்பட்டு:காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழத்தில், தேசிய மகளிர் மற்றும் மகளிர் தினத்தையொட்டி, 'அறிவியலில் மகளிரின் பங்கு' என்ற தலைப்பில், நேற்று முன்தினம், கருத்தரங்கம் நடந்தது.

பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சந்தீப்சன் தலைமை ஏற்றார்.சிறப்பு அழைப்பாளராக, சிரியா நாட்டின், இந்தியாவிற்கான துாதர் டாக்டர் ரியாத்கமீல் அப்பாஸ் பங்கேற்றார்.அவர், சிரியா நாட்டைச் சேர்ந்த, 34 மாணவர்களுக்கு, ஆங்கில பட்டயப்படிப்பு முடித்தற்கான, சான்றிதழ்கள் வழங்கினார். அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் ஜான்திருடிகள், வெளியுறவுத் துறை இயக்குனர் டாக்டர் கத்தார்சிங் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement