Advertisement

கார் திருடிய இருவர் கைது

செங்கல்பட்டு:வல்லத்தில், காரை திருடிய வழக்கில், இருவரை, போலீசார் நேற்று, கைது செய்தனர்.செங்கல்பட்டு அடுத்த, வல்லம் நேரு நகரைச் சேர்ந்தவர், கேதரன்லால். இவர், ஜனவரி, 10ம் தேதி, தன் வீட்டின் முன், 'குவாலிஸ்' காரை நிறுத்தியிருந்தார். இதை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்த புகாரை, செங்கல்பட்டு போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு புறவழிச்சாலையில், நேற்று அதிகாலை, போலீசார், வாகன தணிக்கை செய்தனர்.அப்போது, போலீசாரை பார்த்ததும், நிற்காமல் கார் ஓட்டிய நபரை, போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். காரில் இருந்த இருவரிடம் விசாரித்தனர்.அதில், சென்னை, ஆலந்துார் கண்ணன் நகர் ஸ்டாலின், 20, மீனாம்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகர் கோகுல், 21, என்பதும், கேதரன்லால் காரை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து, இருவரையும், போலீசார் கைது செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement