Advertisement

சில்மிஷம் செய்த வாலிபருக்கு வலை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த, பெருந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி; பிளஸ் 2 படித்து வருகிறார்.நேற்று முன்தினம், பள்ளி முடிந்து, வீட்டிற்கு, சாலையில் நடந்து சென்றார். அப்போது, அதே பகுதியில், தனியார் அடுக்குமாடி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த, வடமாநில வாலிபர் ஒருவர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கட்டுமான பணி நடந்த அடுக்குமாடி குடியிருப்பை முற்றுகையிட்டனர்.தகவலறிந்து வந்த போலீசார், வடமாநில வாலிபரை கைது செய்வதாக கூறியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து, வடமாநில வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement