Advertisement

தொழுநோய் விழிப்புணர்வு

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், தொழுநோய் விழிப்புணர்வு பேரணி, நடந்தது.செங்கல்பட்டு அடுத்த, திருமணியில் உள்ள மத்திய தொழுநோய் போதனா மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், தொழுநோய் விழிப்புணர்வு பேரணி, செங்கல்பட்டு ரயில் நிலைய வளாகத்திலிருந்து, நேற்று துவங்கியது.

புதிய பஸ் நிலையம், ஜி.எஸ்.டி., சாலை வழியாக, ராட்டிணங்கிணறு அருகில், நிறைவடைந்த பேரணியில், மருத்துவகல்லுாரி மாணவர்கள் மற்றும் ஐ.டி.ஐ., மாணவர்கள் பலர் பங்கேற்றனர். இதில், தொழுநோயின் ஆரம்ப அறிகுறி, அதை கட்டுப்படுத்தும் முறை, அந்நோய்க்கு, அனைத்து வித அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் சிகிச்சை குறித்து, பொதுமக்களுக்கு, துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement