Advertisement

மாணவர்களுக்கு பட்டமளிப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 214 மாணவர்களுக்கு, பட்டங்களை, துணை இயக்குனர் ஜி.விஜயமாலா, நேற்று வழங்கினார்.செங்கல்பட்டில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு, 214 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது.துணை இயக்குனர் ஜி.விஜயமாலா பங்கேற்று, இயந்திர வேலையாள், மோட்டார் வாகனம் மற்றும் விவசாய இயந்திரம், தட்டச்சு மற்றும் செயலக பயிற்சி உட்பட, 17 பாடப்பிரிவைச் சேர்ந்த, 214 மாணவர்களுக்கு, பட்டங்களை வழங்கினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement