Advertisement

பல்கலையில் தகராறு 8 பேருக்கு வலை

செங்கல்பட்டு:தனியார் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்கள் மோதல் வழக்கில், எட்டு மாணவர்களை, போலீசார் தேடுகின்றனர்.


சென்னை புறநகரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ., படிக்கும் மாணவர், அதே பல்கலையில், ஒரு மாணவியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அந்த மாணவியின் தோழியை, எம்.பி.ஏ., படிக்கும் மற்றொரு மாணவர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.இதை, காதலி வழியாக காதலன், தோழியை கிண்டல் செய்த நபரை, தன் நண்பர்களுடன் சென்று, 3ம் தேதி தாக்கியுள்ளார்.


இதையடுத்து, அடி வாங்கிய நபர், மறைமலை நகரைச் சேர்ந்த நண்பர் ஒருவரை அழைத்து வந்து, தன்னை தாக்கியோரிடம் சென்று பிரச்னை செய்தார். இதனால், மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து, சண்டையிட்டனர்.இந்த சண்டையின்போது ஆத்திரமடைந்த, மறைமலை நகரைச் சேர்ந்தவர், தன் கைத்துப்பாக்கியால், யாரும் மீதும்படாதபடி சுட்டு, அவர்களை மிரட்டினார். இதனால், பல்கலையில் பதற்றம் நிலவியது.


இது குறித்து, இரு தரப்பினரின் புகாரை, மறைமலை நகர் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, மாணவிக்கு ஆதரவாக இருந்த மூன்று பேரை கைது செய்து, ஜாமினில், போலீசார் விடுவித்தனர். மேலும், பல்கலையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் மற்றும் அவரது நண்பர்களான மாணவர்கள் ஏழு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement