Advertisement

மது ஒழிப்பு விழிப்புணர்வு

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம், நடந்தது.


செங்கல்பட்டு கோட்ட கலால் துறை சார்பில், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம், நேற்று நடந்தது.இந்த பேரணியை, வருவாய் கோட்டாட்சியர் செல்வம், மாவட்ட கலெக்டர் வளாகத்தில், துவக்கி வைத்தார். ஜி.எஸ்.டி., சாலை வழியாக, ராட்டிணங்கிணறு அருகே நிறைவடைந்தது.


இதில், மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்த விளம்பர பதாகைகளை, ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி மாணவியர், கைகளில் ஏந்தி சென்றனர்.கோட்ட கலால் அலுவலர் பாக்கியலட்சுமி, அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சிதம்பரவிநாயகம் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவியர் பங்கேற்றனர்.இதேபோன்ற விழிப்புணர்வு, இன்று, சூணாம்பேடில் நடக்கிறது என, கலால் துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement