Advertisement

வண்டலூர் அருகே பணிமனையில் தீ 5 பஸ்கள் எரிந்து சாம்பல்

திருப்போரூர்:வேங்கடமங்கலத்தில் உள்ள தனியார் பணிமனையில், நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், ஐந்து பஸ்கள் எரிந்தன.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அருகே உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தில், பிரபல தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ் பழுது பார்க்கும் பணிமனை உள்ளது.தவிர, தேர்தல் பிரசாரத்திற்காக, சொகுசு வசதியுடன்கூடிய, சொகுசு மினி பஸ்களும், இங்கு தயாரிக்கப்படுகின்றன.இந்நிலையில், நேற்று, பகல், 12:00 மணிக்கு, திடீர் தீ விபத்து ஏற்பட்டு,
பணிமனையில் இருந்த ஒரு பஸ்சில் தீப்பிடித்தது. அடுத்தடுத்த பஸ்களும், தீ பரவியது.

இதை பார்த்த பணியாளர்கள், சிறுசேரி, மறைமலை நகர், தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு, தகவல் கொடுத்தனர். இதையடுத்து, 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து, தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால், தீயணைப்பு வாகனத்தில், தண்ணீர் தீர்ந்து விட்டதால், அவ்வழியாக சென்ற டேங்கர் லாரிகளின் தண்ணீரை பெற்று, தீயை அணைத்தனர்.


இரண்டு மணி நேரத்திற்கு பின், தீயை முழுதாக அணைத்தனர். இந்த தீயில், ஐந்து பஸ்கள், உதிரி பாகங்கள் எரிந்தன.இந்த தீயால், வேங்கடமங்கலம் பகுதி முழுவதும், புகைமூட்டமாக காணப்பட்டது.பணிமனை ஊழியர்கள், 'காஸ் வெல்டிங்' பணியில் ஈடுபட்டபோது, எதிர்பாராதவிதமாக பஸ்சில் தீ பிடித்ததாக கூறப்படுகிறது. விபத்து குறித்து, தாழம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement