Advertisement

குழந்தைகள் ஆபாச படம் வெளியிட்ட வாலிபர் கைது

செங்கல்பட்டு:குழந்தைகள் ஆபாச படத்தை, சமூக வலைதளத்தில் வெளியிட்ட வாலிபரை, போலீசார், கைது செய்தனர்.


தமிழகத்தில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தை, சமூக வலைதளத்தில் பதிவிடுவது குற்றமாகும்.இந்நிலையில், பாலுார் அடுத்த, பழையசீவரம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த வேலு மகன் சபரிநாதன், 19, என்பவர், தன் மொபைல் போனில் இருந்து, குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தை, சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.


இதை கண்டுபிடித்த போலீசார், சபரிநாதனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு போலீஸ் டி.எஸ்.பி., கந்தனிடம், நேற்று முன்தினம் இரவு, சபரிநாதன் சரணடைந்தார்.செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசார், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டமான, 'போக்சோ' வழக்கில், சபரிநாதனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement