Advertisement

மாணவர்களிடம் விசாரணை

செங்கல்பட்டு:சென்னை, புறநகரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ., படிக்கும் மாணவர்கள், இரு தரப்பாக பிரிந்து, முன்விரோதத்தில் இருந்துள்ளனர்.


இதில், ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களும், மறைமலை நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் மகனும் நண்பர்கள்.இந்நிலையில், மறைமலை நகரைச் சேர்ந்த நபர், தன் நண்பர்களுடன், நேற்று முன்தினம், கல்லுாரிக்கு காரில் வந்துள்ளார். அப்போது, அவ்வழியே சென்ற மற்றொரு தரப்பினரை அவர்கள் வழிமறித்து, தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


தகராறு அதிகமானதால், மறைமலை நகரைச் சேர்ந்த நபர், தன் கைவசம் இருந்த துப்பாக்கியை எடுத்து, யார் மீதும் படாதபடி சுட்டு, மற்றொரு தரப்பினரை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.மறைமலை நகர் போலீசார், மாணவர்களிடம் விசாரிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement