Advertisement

புதுப்பாக்கம் திட்டத்தில் பத்திரப்பதிவுக்கு தடை

திருப்போரூர், புதுப்பாக்கத்தில், தனியார் குடியிருப்பு திட்டம் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்துள்ளது.


செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர், புதுப்பாக்கத்தில் தனியார் நிறுவனம் குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் வீடு வாங்க ஒப்பந்தம் செய்தவர்கள், இதுவரை, 22 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர்.இதை வைத்து, 70 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், திட்டப் பகுதியில், 40 சதவீத பணிகள் கூட முடிக்கப்படவில்லை என, புகார் எழுந்தது.


இது தொடர்பாக, பத்மாலயா குடியிருப்பு வீடு வாங்கியோர் சங்கம், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தை அணுகியது. இந்த மனு தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவர் கே.ஞானதேசிகன் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:மனு தாரர்கள் தரப்பில், 3 கோடி ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டிய நிலையில், கட்டுமான பணிகளை முடிக்க, 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக, கட்டுமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


இந்த நிதியை திரட்ட, ஆவண ரீதியாக சில நடவடிக்கைகளை எடுப்பதில், கட்டுமான நிறுவனம், வீடு வாங்கியோர் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.இதில், கூடுதல் தகவலுக்காக சில குறிப்பிட்ட ஆவணங்களை தாக்கல் செய்ய, வீடு வாங்கியோருக்கு உத்தரவிடப்படுகிறது.அதே சமயம், இத்திட்டம் தொடர்பாக, எந்த பரிமாற்ற பத்திரங்களையும் பதிவு செய்ய வேண்டாம் என, திருப்போரூர் சார் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement