Advertisement

கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோரை நீக்கினார் நிதிஷ்குமார்

Share
பாட்னா: தேர்தல் வியூக நிபுணர் என, போற்றப் படும் பிரசாந்த் கிஷோர், 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., பெற்ற வெற்றியின் பின்னணியில், பிரதமர் மோடியின் பிரசாரம் முக்கிய காரணமாக கூறப்பட்டது. பிரசாரம் எப்படி மேற்கொள்ள வேண்டும்; அதற்கான முறைகள் என்ன; எங்கே மேடையிட்டு எப்படி பேசுவது; சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரம் செய்வது போன்ற நுணுக்கங்களை, பா.ஜ., சிறப்பாக செய்தது.
கடந்த, 2015ல் நடந்த, பீஹார் சட்டசபை தேர்தலில், கிஷோரின் வியூகத்தால், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் ஆனார். இதற்கு பரிகாரமாக, 2018ல், பிரசாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தள மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பிரசாந்த கிஷோர் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்ததாக தகவல் வெளியான நிலையில் முதல்வர் நிதிஷ்குமார் அளித்த பேட்டியில், ‛மத்திய அமைச்சரான அமித்ஷா கேட்டுக்கொண்டதன் பேரில் பிராசந்த் கிஷோரை கட்சியில் சேர்த்தோம். அவருக்கு கட்சியில் உயர் பொறுப்பும் அளிக்கப்பட்டது. அவர் கட்சியில் தொடர்ந்து இருப்பதும் வெளியேற இருப்பதும் தனிப்பட்ட முடிவு. விரும்பினால் அவர் கட்சியை விட்டு தாராளமாக விலகிக்கொள்ளலாம்.' இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.
இந்நிலையில் பிரஷாந்த் கிஷோரை ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்குவதாக நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • Ravichandran - dar salam ,தான்சானியா

    இவன்லாம் ஒரு ஆளுன்னு, மக்களுக்கு தேசத்திற்கு நல்லது செய்தால் ஒட்டு தானே விழும். கிஷோர் போன்ற ஆட்கள் தேவை இல்லை.

  • Rohin - jk ,இந்தியா

    அடுத்து நம்ம சுடலை இந்த பிராட் கிசோருக்கு தீயமுக கட்சியின் துணை தலைவர் பதவி கொடுப்பார்

  • mindum vasantham - madurai,இந்தியா

    இந்த பிரசாந்த் கிஷோர் தான் இந்த பாக்கிஸ்தான் ஆதரவு போராட்டத்துக்கு காரணம் , அறிவை நல்ல விஷயத்துக்கு பயன் படுத்த வேண்டும்

  • Muruga Vel - Mumbai,இந்தியா

    கிஷோர் இன்னும் நிறைய கட்சிகளை ஒரு வழி பாண்ணுவதற்காகவாது விலக வேண்டும் .. தமிழ்நாட்டு குடும்ப கட்சி இவரை ரொம்பவே நம்பியிருக்கு ..

  • Vira -

    Welldone Nithish! Very Good decision. Similarly loose Pavan Verma too.But could not understand why Amithshaw recommended this pain in the back.

Advertisement