Advertisement

தூய்மை நகரங்கள் பட்டியலில் தூங்கா நகரம் தேறுமா? ஜன.,31 வரை மக்கள் ஓட்டுப்பதிவு செய்யலாம்

Share
மதுரை : இந்திய அளவில் துாய்மை நகரங்கள் பட்டியலில் கடந்தாண்டு 201வது இடத்திற்கு தள்ளப்பட்ட துாங்கா நகரமான மதுரை இம்முறை தேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


'ஸ்வச் பாரத் மிஷன்' சார்பில் ஆண்டுதோறும் துாய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்த முறை மதுரை மாநகராட்சிக்கு 201வது இடம் கிடைத்தது. இம்முறை மக்கள் தொகை அடிப்படையில் பல பிரிவுகளாக போட்டி நடக்கிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் மதுரை போட்டியிடுகிறது. இதில் முன்னேற்றம் காண மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.சுகாதாரப்பணிகளை ஆவணப்படுத்துதல், திறந்தவெளி கழிப்பிடம், குப்பை இல்லா நகரச் சான்று, மக்கள் கருத்து, மத்திய அரசின் ரகசிய ஆய்வுக்குழு அறிக்கை அடிப்படையில் 6 ஆயிரம் மதிப்பெண்களுக்கு போட்டி நடக்கிறது.

தற்போது நகர மக்கள் ஓட்டளிக்க ஜன.31 வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவான ஓட்டுகள் அடிப்படையில் தமிழகத்தில் மதுரை 2வது இடத்தில் உள்ளது. நகரில் 63 ஆயிரம் பேர் ஓட்டளித்துள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில், 'மதுரையுடன் 48 நகரங்கள் போட்டியிடுகின்றன. இம்மாதம் இறுதியுடன் போட்டி நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டை விட மதுரை துாய்மையடைந்துள்ளதால், தமிழகத்தில் முதல் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. பிப்., 2வது வாரம் முடிவு தெரிந்துவிடும். நகர மக்கள் ஓட்டளிக்க வேண்டும்' என்றனர்.

ஓட்டளிப்பது எப்படி

அலைபேசியில் பிளே ஸ்டோர் மூலம் 'ss2020 VoteForYourCity' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அலைபேசி எண், முகவரி, மொழியை தேர்வு செய்ய வேண்டும். மதுரையின் துாய்மை குறித்து கேட்கப்படும் 7 கேள்விகளுக்கு தங்கள் பதில் மூலம் மதிப்பெண் வழங்க வேண்டும். துாய்மை நகரங்கள் தேர்வில் இம்மதிப்பெண்கள் முக்கிய இடம் வகிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • bal - chennai,இந்தியா

    தூங்கா நகரம் என்பது புருடா....ஒரு தண்ணிர் பாட்டில் கூட கிடைக்கவில்லை...என்ன தூங்கா நகரம்....

  • kumaresan kr - madurai ,இந்தியா

    அதிர்ச்சியூட்டும் செய்தி. மதுரையின் முக்கிய சுற்றுலா பகுதியான மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கு அருகில் அமைந்துள்ள பந்தடி முதல் தெருவில் உள்ள பெரிய குப்பை கிடங்கை அகற்ற மறுக்கும் மாநகராட்சி, மஹாலை சுற்றியுள்ள நல்ல சுகாதாரமான குடியிருப்பு பகுதியில் லாரி புக்கிங் கிடடங்கிகளுக்கு அனுமதி அளித்து சுகாதாரத்தை முழுவதுமாக கெடுத்து, இந்த பகுதி முழுவதையும் சிறுநீரகம் கழிக்கும் பொது கழிப்பிடமாக மாற்றி ,இங்கு வசிக்கும் பல குடியிருப்புக்கள் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு செல்லும் அளவிற்கு மதுரை மாநகராட்சி இந்த பகுதி மக்களுக்கு எதிராக மிகவும் கொடூரமான நடந்து கொண்டு வருகிறது ஒரு அருமையான சுற்றுலா தளமும் அதை சுற்றி குடியிருப்பு பகுதி மற்றும் ஒரு பெரிய ஜானகிராம் பார்க் அமைக்கப் பட்டது. பந்தடி முதல் தெருவில் வீடு வீடாக குப்பைகளை வாங்குவதில்லை .குப்பைகளை பிரிப்பதில்லை. பந்தடி முதல் தெருவில் ஒரு மாநகராட்சி பள்ளியும் மருத்துவமனைகளும் குடியிருப்புகளும் உள்ளன. நடுவில் ஒரு பீடி சிகிரெட் கடைக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஏனெனில், இங்கு கூடும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இந்த கடை தேவைபடுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் வந்து கண்டுகளிக்கும் ஒரு அருமையான அழகான சுற்றுலா தளத்தை இவர்கள் கையாளும் விதம் கொடூரமானது. தயவு செய்து பந்தடி முதல் தெருவில் அமைந்துள்ள குப்பை கிட்டங்கிகளை அகற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்லுங்கள். இந்த தெருவிலும் மஹாலை சுற்றியுள்ள லாரி புக்கிங் கிடங்கிகளையும் ரிங் ரோடு, அவனியாபுரம், சிந்தாமணி ரயில்வே கேட் டிற்கு அப்பால் உள்ள பகுதி களுக்கு கொண்டு செல்லலாம் . மஹாலை சுற்றி எப்போதும் லாரிகள் நிற்கும் இடமாக மாறி வருகின்றன. இதனால் மாநகராட்சிக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்படுகிறது என்பதை கூட மாநகராட்சி அதிகாரிகள் தெரிந்துகொள்வதில்லை. இந்த இடத்தில அதாவது பந்தடி முதல் தெரு மற்றும் மஹால் சுற்று பகுதிகளில் நம் நாட்டு தமிழ் நாட்டுபாரம்பரியத்து தொடர்புடைய பூம்புகார் மாதிரி எம்போரியம், பட்டு சேலைகள், சுங்கிடி சேலைகள், மதுரை பாரம்பரிய சிற்பங்கள் கலை பொருட்களின் விற்பனை நிலையங்கள் இருக்க வேண்டும். இதனால் மாநகராட்சிக்கு வருமானமும் கிடைக்கும் சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருக்கும் .அந்த மாதிரி விற்பனை நிலையங்கள் கழிப்பறையுடன் கூடியதாக இருக்க வேண்டும்

Advertisement