Load Image
Advertisement

ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வது ஏன்?; பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப்

 ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வது ஏன்?; பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப்
ADVERTISEMENT
அயோத்தி: பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப், ஆதரவற்ற பல்லாயிரம் உடல்களை அடக்கம் செய்து வருகிறார். இதற்கு தனது மகன் இறப்பை காரணமாக கூறியுள்ளார்.


கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை, மத்திய அரசு நேற்று (ஜன.,25) அறிவித்தது. இதில், 7 பேருக்கு பத்ம விபூஷண், 16 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது. பத்மஸ்ரீ விருது பெறுபவர்களில் ஒருவரான முகமது ஷெரிப் (80), உ.பி.,யில் பல ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார். இவரின் சேவையை அறிந்த மாநில அரசு, பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.

Latest Tamil News

யார் இந்த முகமது ஷெரிப்?



உ.பி., மாநிலம் அயோத்தியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தார். 27 ஆண்டுகளாக ஆதரவற்று இறப்பவர்களை ஜாதிமத பேதமின்றி தனது சொந்த செலவில் இறுதி சடங்கு செய்து வந்துள்ளார். இதுவரையில் பல்லாயிரம் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார். இது குறித்து ஷெரிப் கூறியதாவது: 1993ம் ஆண்டில் சுல்தான்பூரில் வேலைக்கு சென்ற என் மகன் கொலை செய்யப்பட்டான்.

Latest Tamil News
ஆதரவற்றவர் என கருதி போலீசார் அடக்கம் செய்தனர். ஆனால் அதுப்பற்றி எனக்கு ஒரு மாதம் கழித்து தான் தெரியவந்தது. அப்போது தான் ஆதரவற்றவர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். இதுவரை 3000 ஹிந்து மற்றும் 2500 முஸ்லிம் ஆதரவற்றவர்களின் இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (38)

  • Raja - Thoothukudi,இந்தியா

    முஸ்லிம்களுக்கு எதிரான கட்சின்னு பாஜகவை குறைசொல்லுபவர்கள் கவனிக்கவும். இவரை பரிந்துரை செய்தது யோகி. விருது வழங்கியது மோடி. தமிழ்நாட்டுல எந்த கட்சியாவது இது பத்தி பேசுவாங்களா? நல்லவர்களை கௌரவிக்க மோடி தயங்குவது இல்லை.

  • bal - chennai,இந்தியா

    பாவம் மனுஷன்...இவர் மனநிலை புரியுது...நாமும் துணை நிற்போம்.....

  • konanki - Chennai,இந்தியா

    ஆதரவற்றவர்கள், இயற்கை சீற்றங்களினால் உயிரிழப்பு ஏற்படும் போது அவர்களின் இறுதி கடன் செய்பவர் கள் அஸ்வமேத யாகம் செய்யும் மகச்சக்தி

  • konanki - Chennai,இந்தியா

    அப்துல் கலாம் ஐயா வை "கலாம் என்றால் கலகம்" என்றவன் தமிழன். புனிதமான செயல்பரியும் இந்த உயர்ந்த மனிதருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது சங்கிகள்

  • ஹரிஷ் - விழுப்புரம்,இந்தியா

    இவர் ஒரு மாமனிதர்...இந்த நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் இவர் உறவுதான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement