Advertisement

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: மேலும் ஒருவர் கைது

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டிஎன்பிஎஸ்சி 'குரூப்-4' தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வில், பெரும் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், முறைகேடு நடந்தது உறுதியானது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகார், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. அவர்களின் விசாரணையில், மெகா மோசடி நடந்ததும், தேர்வு எழுதியோரில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு பணிக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது. மோசடி நடந்த ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களுக்கு நேரடியாக சென்றும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே, பள்ளிக் கல்வித்துறை அலுவலக உதவியாளர் ரமேஷ், 39, எரிசக்தி துறை உதவியாளர் திருக்குமரன், 35, மற்றும் தேர்வு எழுதிய நிதிஷ்குமார், 21, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், டிபிஐ-யில் ஆவண கிளார்க்காக பணிபுரிந்து வரும் ஓம்காந்தன் என்பவர் இன்று (ஜன.,26) கைது செய்யப்பட்டார். இவர், விடைத்தாள்களை கொண்டு செல்லும் வழியில் அதைமாற்றி முறைகேட்டிற்கு உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

  • Prem Kumar -

    அரசு ஊழியர்களிடையே ஒழுக்கமின்மை, நேர்மையின்மை, விசுவாசமின்மை குறைந்து வருகிறது என்பதை தேர்வுதாள் மோசடி உண்மையாக்குகிறது

  • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

    இதுபோல் பல துறைகளில் ஊழல்கள் காட்டாற்று வெள்ளம்போல் கரை புரண்டு ஓடி இருக்கின்றன தமிழகத்தில் இன்றைய அரசாங்கமும் முந்தைய அரசாங்கமும் இந்த ஊழல்களை பற்றி சிறிதளவு கூட கவலை படவில்லை அரசியல் வியாதிகள் அமைச்சர் பெரு மக்கள் , இவர்களுக்கு விளக்கு பிடிக்கும் அதிகாரிகள் இவர்கள் எல்லோருமே கூட்டு கொள்ளை அடித்துள்ளனர் போதாக்குறைக்கு எதிர்கட்சிகளும் இதில் ஆதாயம் அடைந்துள்ளனர் . ஆட்சியில் இருப்போரும் எதிர் கட்சிகளும் வெளியே பகைவர்கள் ஆனால் உள்ளயே மாமன் மச்சான்கள் பங்கு சரியாக பிரிக்கப்பட்டு எங்கு போகவேண்டுமோ அங்கு ஒரு பைசா குறையாது போய் சேர்ந்து விடும் தமிழக வழக்கறிஞர்கள் எத்தனை முறையாக தேர்வு எழுதி வெற்றி பெற்று பதிவு பெற்றுள்ளனர் ? திமுக ,மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் தான் கீழமை நீதி மன்றம் முதல் உயர் நீதிமன்றம் வரை வழக்கறிஞர்களாகவோ , நீதி பதிகளாகவோ நியமனம் பெற்றுள்ளனர் என்ன செய்வது கண்ணை மூடிக்கொள்ள வேண்டியது தான்

  • G.MUTHIAH - Tamil Nadu,இந்தியா

    தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு எழுதியவர்கள், 1976 முதல் 1986 வரை எம்.பி,எம்.எல.ஏ க்களை பிடித்து பணம் கொடுத்து தொகுதி வாரியாக அரசு வேலை வாங்கினார்கள்.அப்பொழுது இருந்த தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்தவர் அமைதியாக இருந்துவிட்டார்.முன்னால் முதல்வர்எம்.ஜி.ஆர் தலையிட்டு, ஊழல் குறைந்தது. பின் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஊழலை முற்றிலும் குறைத்து தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நேர்மையாக நடந்து வந்தது. இப்பொழது அரசு அலுவளர்கள் ஒரு சில உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டு தரகர்கள் மூலம் பணம் கொள்ளை அடிக்கின்றனர். ஊழலில் ஈடுபட்ட இவர்களுக்கு அரபுநாடுகளைப் போல தண்டனை வழங்க வேண்டும் அல்லது சிங்கப்பூர் போல இவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து தண்டனை வழங்க வேண்டும் . "அப்பொழுதுதான் ஊழல் ஒழியும்"

  • Nathan - Hyderabad,இந்தியா

    விட்ருவாங்களா ஆய்வு செய்ய. சும்மா அங்க இங்க ரெண்டு தட்டி தாண்டி வித்த காட்டி கேஸை நைசா கரைச்சுரலாம்.

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    பேசாமல் தமிழக ஊழல் கம்பெனி தலைமை அலுவலகத்தில் உள்ள கணினியை ஆய்வு செய்தால் மொத்த நெட்வொர்க்கும் மாட்டும்...

Advertisement