Advertisement

மாநில போட்டிக்கு தகுதி: மாணவிகளுக்கு பாராட்டு

தேவதானப்பட்டி : தேனி மாவட்ட அளவில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான பீச் வாலிபால் போட்டி, வைகை அணை ஸ்ரீவல்லி வரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந் தது. இதில் 8 குறுவட்ட அணிகள் கலந்து கொண்டன.


இறுதிப்போட்டியில் ஸ்ரீவல்லி வரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி விளையாட்டு விடுதி மாணவிகள் அணிகள் மோதின.23;-21 க்கு 16; -17 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீ வல்லி வரதராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி வெற்றி பெற்றது. இவர்கள் மாநில அளவில் தூத்துக்குடியில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகினர். இதில் வென்ற மாணவிகள் காவியா, சுபிக்ஷா ஆகியோரை பள்ளி தாளாளர் சத்தியமூர்த்தி, முதல்வர் டோலி ஜான், உடற்கல்வி ஆசிரியர்கள் பாலமுருகன், துரைராஜ், ஆசிரியர்கள் பாராட் டினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement