Advertisement

வேட்பு மனு தாக்கல் செய்ய கெஜ்ரிவால் ஆறு மணி நேரம் காத்திருப்பு

Share
புதுடில்லி: விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆறு மணி நேர காத்திருப்புக்குப்பின் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தலைநகர் டில்லி சட்டசபைக்கு வரும் பிப்.,8 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்., 11 -ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ., காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிகட்சி உட்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட உள்ளன. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இன்று கடைசி நாள் என்பதால் தற்போதைய மாநில முதல்வரான அர்விந்த் கெஜ்ரிவால் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்திருந்தார். அவருக்கு முன்னர் ஏராளமானோர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய காத்திருந்தனர். இதனையடுத்து அவருக்கு 45 நம்பர் கொண்ட டோக்கன் வழங்கப்பட்டது. காத்திருந்த வேளையில் கெஜ்ரிவால் பதிவிட்ட டுவிட்டரில் இங்குஏராளமானோர் காத்திருக்கின்றனர். ஜனநாயகத்தில் பல மக்கள் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார்.
இது குறித்து ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில் கெஜ்ரிவால் மதியம் 12.30 மணி அளவில் மனுதாக்கல் செய்ய வந்தார். ஆறுமணி நேர காத்திருப்புக்கு பின்னர் 6.30 மணி அளவிலேயே அவர் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டார் என கூறினார்.
முன்னதாக கெஜ்ரிவால் நேற்று திங்கட்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்த போது நேரம் கடந்து விட்டதால் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வில்லை. வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்த போது மக்களை சந்தித்து வர நேரிட்டதால் கால தாமதம் ஏற்பட்டது என காரணம் கூறி இருந்தார். கெஜ்ரிவாலை போன்று போட்டியிடுவோர் வேட்பு மனுதாக்கல் செய்ய வந்தவர்கள் கூறுகையில் போலீசார் முதல்வருக்கு விஜபி சலுகை வழங்குவதாக குற்றம் சாட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (12)

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    டெல்லி,பாண்டிச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களை ஆளும் முதல்வர்களுக்கு மரியாதை இல்லை.Lt .கவர்னர்கள் முதல் மந்திரிகளின் அதிகாரங்களை பிடிங்கிக்கொண்டு அவர்களை டம்மி ஆக்குகிறார்கள். பாண்டிச்சேரியை வட தமிழ் நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்கி அதனுடன் இணைக்கலாம். இணைக்கலாம். டெல்லியை யூனியன் பிரதேச லிஸ்டிலிருந்து நீக்கி விடலாம்.அதுபோல் பிற யூனியன் பிரதேசங்களையும் அருகிலுள்ள மாநிலங்களோடு இணைப்பதே சரியான செயலாய் இருக்கும்.

  • திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் - Chennai,இந்தியா

    டில்லி ஒரு கிராம பஞ்சாயத்து வார்டு எனும் அளவுக்கு கொண்டுபோய் விட்டார்கள் மிக மிக கீழ்த்தரமான அரசியல் நிலை

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    ..அரசியல் செய்வதில் கெஜ்ரிவால் கெட்டிக்காரர். மானம் கெட்டவர்.

  • raja - Kanchipuram,இந்தியா

    அரசியல் எனும் சாக்கடை

Advertisement