Advertisement

அ.தி.மு.க.,வில் அனைவரும் முதல் அமைச்சர்கள் தான்

சென்னை: அ.தி.முக.,வில் அனைவரும் முதல் அமைச்சர்கள்தான் என சேலத்தில் நடந்த எம்.ஜி.ஆர் .பிறந்த தின விழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் முதல் அமைச்சர்கள் ஆவதற்கான தகுதி உடையவர்கள்.ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர். அ.திமு.க.,வில் உள்ளவர்கள் அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும்.


எம்.ஜி.ஆர் படங்களில் இருந்த உயிரோட்டம் இப்போது வரும் படங்களில் இல்லை. ஏதேதோ தலைப்புகளில் திரைப்படங்கள் வருகின்றன. ஒன்று கூட அவை மனதில் நிற்பதில்லை . திரைப்படங்கள் மூலம் ஆக்கப்பூர்வர்மான கருத்துக்களை சமுதாயத்தில் புகுத்தியவர் எம்.ஜி.ஆர். சாதாரண நபர் தி.மு.க.,வில் உயர்ந்த பதவிக்கு வரமுடியுமா? தி.மு.க.,விற்கு இனி எந்தப்பதவியும் இல்லை என மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (27)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    அதான் ஆளாளுக்கு இவ்வளவு கொள்ளை அடிக்கிறாங்களா

  • Girija - Chennai,இந்தியா

    இவங்கள வெச்சு வருத்தப்படாத மந்திரிகள் (வாலிபர்கள்) சங்கம் 2 செலவில்லாமல் எடுக்கலாம், கலெக்ஷன் ஆயிரம் கோடிக்கு எகிறிடும்.

  • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

    எடப்பாடி சொல்வது சரிதான். இன்றைக்கு அதிமுகவில் அனைவரும் முதலமைச்சர் தோரணையில்தான் பேசுகிறார்கள். ஜெயா இருக்கும் வரையில் வாலை சுருட்டிக்கொண்டு கொள்ளையடிப்பதை மட்டும் செய்தவர்கள் இன்றைக்கு கட்டவிழ்த்து விட்ட மாடு போல் திரிகிறார்கள். கொள்ளையடிப்பது ஒன்றே பிரதானமான நோக்கம். TNPSC ஊழலில் யார் யாருக்கு எவ்வளவு பங்கோ தெரியவில்லை. முதலமைச்சர் உட்பட யாரும் வாயை திறக்கவில்லை. அந்த ஊழல் மூடி மறைக்கப்படுகிறது. மோடிஜி என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.

  • sahayadhas - chennai,இந்தியா

    அப நாங்கள் அடிமைகள் தானா?

    • Srinivas - Chennai,இந்தியா

      //அப நாங்கள் அடிமைகள் தானா?//

  • S. Rajan - Auckland,நியூ சிலாந்து

    நாட்டுக்கு உழைக்க தேவியில்லை. கட்சிக்கு உழைத்தால் போதும். பணம் சுருட்ட பல வழிகள் உண்டு. எல்லோரும் வாங்க. ஏமாறும் மக்கள் இருக்கும் வரை நமக்கு நல்லதே.

Advertisement