Advertisement

கம்பீரம் கரைந்த காட்டு ராஜா; வைரலாகும் சூடான் சிங்கங்கள்

கர்டொம்: சூடானில் நிலவும் உணவுப் பற்றாக்குறையால், எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் சிங்கங்களுக்கு, உடனடியாக உதவக் கோரி, #SudanAnimalRescue என்ற 'ஹாஸ்டேக்'குடன் சிங்கங்களின் படங்கள் வைரலாகி வருகின்றன.

காடுகளின் அரசன் என்றதும், கற்றையான முடி பிடரியில் புரள, கம்பீரத்துடன் நிற்கும் சிங்கத்தின் உருவம் அனைவரது மனத் திரையிலும் விரியும். 'காட்டு ராஜா' என்ற பெயருக்கு ஏற்ப, கம்பீரமான தோற்றத்துடன் இருக்கும் சிங்கத்தைப் பார்த்தாலே அனைவரும் அஞ்சுவர். ஆனால், சில நாட்களாக, இணையத்தில் உலாவரும் சிங்கங்களின் படங்கள், காண்போரை கலங்கடித்து வருகின்றன. மிகவும் மெலிந்து ஒடுங்கிய உடல், வெளியில் தெரியும் எலும்புகள், உடலை விட்டு உயிர் பிரியும் தறுவாயில், மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் முகத்துடன் அந்த சிங்கங்கள் இருக்கின்றன.
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானின் தலைநகர் கார்டூமில் உள்ள அல்-குரேஷி விலங்கியல் பூங்கா தான், அந்த சிங்கங்களின் வசிப்பிடம். அங்கு ஐந்து சிங்கங்கள் பராமரிக்கப்படுகின்றன. கார்டூம் நகராட்சி நிர்வாகமும் தனியார் சிலரும் வழங்கும் நிதியே, பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு உணவு, பராமரிப்புப் போன்றவற்றிற்கு செலவிடப்பட்டு வருகிறது. அதிகரிக்கும் உணவு விலை மற்றும் பணப் பற்றாக்குறை ஆகியவற்றால், சூடானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால், சில மாதங்களாகச் சிங்கங்களுக்கு அளிக்க, போதுமான உணவும் மருந்தும் இன்றி பூங்கா ஊழியர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் சிங்கங்கள் உடல் மெலிந்துள்ளன.
சிங்கங்களின் நிலை பற்றி, பூங்கா ஊழியர்கள் கூறுகையில், 'சிங்கங்களுக்குத் தேவையான உணவு இல்லை. இதனால் மூன்றில் இரு பங்கு உடல் எடையை சிங்கங்கள் இழந்துள்ளன. சிங்கங்களை கம்பீரமாக கண்டவர்கள், இங்குள்ள சிங்கங்களைப் பார்த்தவுடன் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். எங்களது சொந்தச் செலவில் முடிந்த வரை அவற்றைப் பராமரித்து வருகிறோம்' என்றனர்.

சிங்கங்களின் நிலையைக் கண்ட சிலர், அதைப் படம் எடுத்து, 'இந்தச் சிங்கங்களுக்குப் பாதுகாப்பான நல்ல வசதியுடன் கூடிய வேறு இடம் தேவை' என, சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அதைப்பார்த்த பலரும் #SudanAnimalRescue என்ற ஹாஸ்டேக்குடன் வைரலாக்கி வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (20)

  • Natarajan Dhanasekar - Bhopal,இந்தியா

    ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாக நீலிக்கண்ணீர் வடித்த மானம் கேட்ட PETA உறுப்பினர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் ....

  • Sivak - Chennai,இந்தியா

    மாடுகளுக்கு நீலிக்கண்ணீர் வடித்த மானம் கேட்ட PETA உறுப்பினர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் ...

    • Pannadai Pandian - wuxi,சீனா

      மாடுகளுக்கு நீலிக்கண்ணீர் வடித்த மானம் கேட்ட PETA உறுப்பினர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் ...

    • ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா

      தமிழனின் வீர விளையாட்டும் ஜல்லிக்கட்டு காளைகளுக்காக நீலிக்கண்ணீர் வடித்த மானம் கேட்ட PETA உறுப்பினர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் ......

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    சிங்கத்துக்கு போட வேண்டிய இரைகளை மனுசன் தின்னு முடிச்சால் ?

  • ஆப்பு -

    தெருநாய் ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டாங்களே....

  • venkatesh - சின்னமனூர்,இந்தியா

    சூடான விலைக்கு வாங்கமுடியுமா குமாரு . . . . ஏரியா வெல ரெம்ம கம்மியா இருக்கும் போல தெரியுது . . . அப்படின்னு யாராவது கேட்டா என்ன சொல்வது. . . ?

Advertisement