Advertisement

தர்பார் டிக்கெட் ரூ.1200க்கு விற்பதா: ரஜினியை வம்புக்கிழுக்கும் சுபவீ

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நேர்மை பற்றியும், ஊழலை ஒழிப்பது பற்றியும் பேசும் ரஜினி, தர்பார் திரைப்படத்தின் டிக்கெட் கள்ளத்தனமாக ரூ.1200க்கு விற்கப்பட்டதை கண்டித்திருக்கிறாரா, என திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர், சுப.வீரபாண்டியன் வம்புக்கு இழுத்திருக்கிறார்.
சென்னையில் நடந்த, 'துக்ளக்' விழாவில், நடிகர் ரஜினிகாந்த், '1971ல் சேலத்தில் ஈ.வெ.ரா., நடத்திய ஊர்வலத்தில் ராமர், சீதை சிலைகளை உடை இல்லாமல் எடுத்து சென்றனர். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ, துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். இது, அப்போதைய தி.மு.க., அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டதால், அந்த இதழுக்கு தடை விதிக்கப்பட்டதால் 'பிளாக்'கில் விற்கப்பட்டதை வாங்கி படித்தேன்,' என்றார்.
இது குறித்து சுப.வீரபாண்டியன் கூறியுள்ளதாவது: 1971ல் 10 ரூபாய்க்கெல்லாம் எந்த ஏடும் விற்கப்படுவதில்லை. அன்றைக்கு 50 காசு, 1ரூபாய் என தான் விற்பனையாகி இருக்கும். அப்படியே 'பிளாக்கில்' விற்றிருந்தால், ரஜினி கண்டனம் அல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அதை தான் தர்பார் டிக்கெட்டும் பிளாக்கில் விற்கிறது, துக்ளக்கும் பிளாக்கில் விற்கிறது என கூறினேன்.
பிளாக்கை ஆதரிப்பவர்கள் எப்படி ஊழலை ஒழிப்பார்கள்? எனவே அப்போதே 'சிஸ்டம்' கெட்டு போய்விட்டதாக நினைக்கிறேன். நேர்மை பற்றியும், ஊழலை ஒழிப்பது பற்றியும் பேசும் ரஜினி, தர்பார் திரைப்படத்தின் டிக்கெட் கள்ளத்தனமாக ரூ.1200க்கு விற்பதை கண்டித்திருக்கிறாரா? ஊழலை முதலில் அவரது வீட்டில் இருந்து ஒழிக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (106)

 • karutthu - nainital,இந்தியா

  சுப .வீ யார் இந்த ஆளு ??? எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கே

 • mukundan - chennai,இந்தியா

  ஜல்லிக்கட்டுல மாட்டை காப்பாத்தணும்னு சொல்லிக்கிட்டு, அப்புறம் மத்திய அரசு மாடு சாப்பிடுறதை தடை பண்ண கூடாதுன்னு கொடி புடிச்ச ரெட்டை வாய் ஆளு தானே இந்த சுகவீ. இப்படி மாத்தி மாத்தி பேசுறதே வழக்கமா போச்சு இந்த தி.க. கரங்களுக்கு. ராத்திரி எப்புடி தான் தூக்கம் வருதோ இவிங்களுக்கு தெரியலை.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  அரசியல்வாதிகள் பலர் (சிலர் நீங்கலாக) லஞ்சம் மற்றும் நிதி என்ற பெயரில் கட்டாய வசூல் முதல் போடாமல் அதற்கும் பல கோடிகள் முதல் போட்டு எடுக்கப்படும் படத்தில் போட்ட முதலை எடுப்பதும், லாபம் சம்பாதிப்பதும் பிசினஸ். இது சிந்திக்க கூடியவர்கள் அனைவரும் அறிந்ததே ஏன் சிலருக்கு புரியாத புதிராக உள்ளது. தமிழக அரசியலில் இந்த வியாபாரம், அமோகம்..

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  பிரியாணி இல்லையென்றாலும் பரவாயில்லை குஷ்கா போட்டாவது வெரைட்டி விடுங்கள்.. முடியல.. . இவனுவெல்லாம் அப்பப்ப வர்றானுவ.. பகுத்தறிவு பன்னாடைஅறிவுன்னு கூவுறானுவ.. லெக் பீஸ் கெடச்ச ஒடனே எஸ்கேப் ஆவூரானுவ..இம்சை ஜாஸ்தியாயிட்டே போவுது சோ ஒன்லி குஷ்கா.. நோ லெக் பீஸ்..

 • Jaya Ram - madurai,இந்தியா

  அட அறிவு ஜீவியே உங்களின் தமிழினத்தலைவன் முக திமுகவில் எம் எல் ஏ , எம் பி சீட் களுக்கு எவ்வளவு பணம் வாங்கிக்கொண்டு சீட் கொடுத்தார் அதை யாராவது கேட்டீர்களா அங்கே எல்லாவற்றினையும் பொத்திக்கொண்டு திரிந்தீர்களே இப்போ என்ன உங்களுக்கு பாத்துகிட்டு வந்திருச்சு

Advertisement