Advertisement

மிட்நைட்டில் விழுந்த மிடில் பெர்த்: 2 பயணிகள் காயம்

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையிலிருந்து நாகர்கோவில் சென்ற ரயிலின் 'மிடில் பெர்த்' நடுராத்திரியில் கழன்று விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர்.

வெளியூர் செல்பவர்கள், பாதுகாப்பான பயணமாக கருதுவது ரயில் பயணமே. அதில் தான் சிரமமின்றி பயணம் செய்யலாம் என்பது அனைவரின் கருத்து. இரவு நேரப்பயணத்தில் தூங்கிக்கொண்டே செல்ல, படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகளில், வயதானவர்களின் முதல் சாய்ஸ், 'லோயர் பெர்த்' தான். ஆனால், அதிலும் ஆபத்து நிகழ்ந்தால் என்னாவது. சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று (ஜன.,20) இரவு 7:20 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்ட விரைவு ரயிலின் எஸ்10 பெட்டியில் 'லோயர் பெர்த்தில்' இருந்தவரின் மீது படுக்கை கழன்று விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்த ரயிலில் எஸ்10 பெட்டியின் 35ம் எண் கொண்ட 'லோயர் பெர்த்' படுக்கையில் கடம்பூரை சேர்ந்த தர்மராஜ் (70) தூங்கிக்கொண்டிருந்தார். நடுஇரவில் திடீரென மிடில் பெர்த் படுக்கை கழன்று விழுந்தது. கீழே படுத்திருந்த தர்மராஜ் மீது விழுந்ததில் 2 பேரும் காயமானார்கள். சப்தம் கேட்டு பக்கத்து படுக்கையில் இருந்த சக பயணிகள் எழுந்து வந்து, இடுக்கில் இருந்த இருவரையும் மீட்டனர்.

மதுரை ரயில் நிலையம் வந்ததும், அங்கிருந்த ஊழியர்கள் படுக்கையை சரிசெய்ய முயன்றதாகவும், அதனை சரி செய்ய இயலவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தால் அரை மணிநேர தாமதத்திற்கு பிறகு ரயில் கிளம்பியது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (28)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அறுபது வயதுக்குமேல் உள்ளவர்களுக்கு கண்டிப்பாக lower பெர்த் தரமாட்டார்கள்

  • karutthu - nainital,இந்தியா

    இதற்கு நான் சைடு லோயர் பரர்த் தான் கூடுமானவரை விரும்புவேன் ஆன் லைன் புக்கிங் செய்யும்போது அது கிடைப்பதில்லை .

  • Iyyappan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    தமிழன் அடிப்படையில் புத்திமான். சங்கீலிய முறுகி உயரத்தை கூட்டி குறைக்க முடியும். இது தெரியலையா ? அசிங்கம்.

  • S Madhavan - chennai,இந்தியா

    // அந்த ரயிலில் எஸ்10 பெட்டியின் 35ம் எண் கொண்ட 'லோயர் பெர்த்' படுக்கையில் // எஸ் 10 எனும் பேட்டி, ஸ்லீப்பர் வகுப்பை குறிக்கும். இந்த வகுப்பில் 35 ம் என் கொண்ட படுக்கை, மிடில் பெர்த் அல்ல, அப்பர் (Upper) பெர்த் ஆகும்.. 33 கீழ், 34 நடு மற்றும் 35 உயரப்படுக்கை ஆகும்.

  • oce - kadappa,இந்தியா

    ரயில் வேகமா செல்லும் போது படுக்கைகளை மாட்டி இருக்கும் சங்கிலிகள் ஆடி ஆடி தேய்ந்ததில் படுக்கை கழன்று கீழே விழுந்திருக்கும். தாண்ட்வக்கோன் அவருக்கு தெரிந்த டப்பா தமிழில் மாற்று கருத்து சொல்வார்.

Advertisement