Advertisement

ரஜினியின் கருத்துக்கு ஆதரவும்... எதிர்ப்பும்...

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'துக்ளக்' இதழ் விழாவில் விழாவில் கேள்விப்பட்டதை, பத்திரிகைகளில் வெளியானதை தான் பேசினேன். அதனால், யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினி கூறியதற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிந்தித்து பேச வேண்டும்திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ரஜினி அரசியல்வாதி அல்ல. அவர் ஒரு நடிகர். ரஜினியிடம் நான் ஒன்றை விரும்பி கேட்டு கொள்கிறேன். நடிகர் ரஜினி, ஈ.வெ.ரா., குறித்து யோசித்து, சிந்தித்து பேச வேண்டும் என்றார்.

உதவ தயார்
பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி வெளியிட்ட அறிக்கை: 1971 ல் நடந்த ஈ.வெ.ரா., பேரணியில் ராமர் மற்றும் சீதையை கேவலமாக சித்தரித்து அணிவகுத்து சென்றது உண்மை. இதனை, சோ 'துக்ளக்கில்' பதிவிட்டுள்ளார். எனவே, நடிகர் ரஜினிகாந்த், தனது கருத்தில் உறுதியாக இருந்தால் தேவைப்பட்டால், ஒரு மாற்றத்திற்காக இம்முறை அவருக்கு நீதிமன்றத்தில் சட்ட ரீதியில் ஆதரவு அளிக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்பார்திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி வெளியிட்ட அறிக்கை: ஈ.வெ.ரா., விவகாரத்தில், நடிகர் ரஜினி உண்மை தெரியாமல் பேசுகிறார். உண்மை தெரிந்ததும் மன்னிப்பு கேட்பார். ஏற்கனவே காவிரி விவகாரத்தில் உண்மை தெரிந்ததும் கர்நாடகாவில் ரஜினி மன்னிப்பு கோரினார். இவ்வாறு அவர் கூறினார்.

துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூறியதாவது:

முழுமையாக அறிந்த பின் கருத்து கூற வேண்டும்ஈ.வே.ரா கருத்துக்கள் கோபுரத்தில் வைக்கப்படவேண்டியவை என்றும், என்னை போன்றவர்கள் உயர்ந்த நிலையை அடைய ஈ.வே.ராவே காரணம். ஈ.வே.ராவின் கருத்துக்களை முழுமையாக அறிந்த கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்க வேண்டும் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (119)

 • S.P. Barucha - Pune,இந்தியா

  எம்.ஆர். ராதா வீட்டு வாடகை கொடுக்காததால் அவர் குடியிருந்த ரூமை பூட்டிவிட்டு, உடைமைகளை தூக்கி பெரியார் வீசிவிட்டார் . இது உண்மையா ? பொய்யா ? பெரியார் இந்த விஷயத்தில் சிறியார் ஆகிவிட்டார்.

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  அந்த கன்னட வெறியன் தமிழனின் எதிரி சொரியானுக்கு இவ்வளவு அரசியல்வாதிகள் ஆதரவா? இத்தனைக்கும் அந்த ஆளுக்கு மக்கள் ஆதரவே என்றுமே இருந்தது இல்லை, ஒரு தேர்தலிலும் நின்னது கிடையாது.திமுகவுக்கும் சொரியனுக்குமே அந்த காலத்தில் அசிங்க அசிங்கமாக சொற்போர்கள் நடக்கும். இப்போது அந்தகால உண்மைகள் யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் பேசுகிறார்களோ?

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  மக்கள்பணத்தை கொள்ளைஅடிச்சுக்கோபுரத்துலே குத்தினாலும் உளைசகாசு இல்லீயே ஆப்ஸ் என்ன எவ்ளோமுதல்பொட்டிகையென்று எல்லோரும்

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  அமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு எந்த உயரம் வரை ஈவேராவின் கருத்துக்களை பற்றி தெரியும். ஈவேராவின் கருத்துக்கள் எனது கோபுரத்தின் மீது வைக்கப்பட வேண்டியவை? மின்சார ஹை டென்ஷன் கோபுரத்திலா அங்கு வைத்தால் தான் மின்சார ஸ்பார்க் அடித்து சீக்கிரம் கருகும் எத்தனை அதிமுக ஆட்கள் ஈவேராவுக்கு சொம்பு தூக்கி உள்ளார்கள்? அந்த கூட்டத்தில் OPSm ஒருவரா

 • Gopi - Chennai,இந்தியா

  உதயநிதி அன்னே, நீங்கள் கூறியவாறு குடியுரிமை சட்டப்போராட்டதிற்கு வரமுடியாத இந்த 70 வயது பெரியவர் வீட்டிலேயே இருக்கட்டும் என்றீர். இந்த பெரியவர்தான் 1996 இல் நீங்கள் ஜெட்டி போட்டிருக்கும் போது அரசியல் அனாதையாக இருந்த திமுகாவிற்கு வாழ்வு கொடுத்தார். திரு சோவும் மூப்பனாரும் இந்த பெரியவரை அப்பொழுதே கட்சித்தொடங்கி திமுக அதிமுகவுக்கு மாற்றாக கொண்டுவந்திருந்தால் நீங்களெல்லாம் தியேட்டர் வளாகங்களில் பிளாக் டிக்கெட்டு தான் வித்து கொண்டிருப்பீர்கள்.

Advertisement