Advertisement

பஸ் குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில் மறியல்

குன்றத்துார்; குன்றத்துார் அருகே பேருந்து சேவை நிறுத்தப்பட்டதை கண்டித்து, குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.குன்றத்துாரை ஒட்டி, பூந்தண்டலம், பழந்தண்டலம், சோமங்கலம், நல்லுார் புது நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு, குன்றத்துாரில் இருந்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.சில மாதங்களுக்கு முன், பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.அவசரத்திற்கு மருத்துவமனை செல்வதற்கு கூட, வாகன வசதி இல்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், பேருந்து சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், சோமங்கலம் கூட்ரோடு சந்திப்பில், 300க்கும் மேற்பட்டோர், நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் விரைந்து பேச்சு நடத்தினர். போக்கு வரத்து கழக அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டுமே, போராட்டத்தை கைவிடுவதாக, பொதுமக்கள் கூறினர்.இதையடுத்து, போக்குவரக்கு கழக அதிகாரிகள் பேச்சு நடத்தி, பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின், மறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் நெரிசல் ஏற்பட்டது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement