Advertisement

சுற்றுச்சூழலை பாதுகாக்க துணிப்பை வழங்கும் திட்டம் அவசியம்

Share
நாம் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனை தரக்கூடிய மரங்கள் பல்வேறு காரணங்களால் வெட்டி அழிக்கப்படுவதால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து பூமி மாசுபடத்துவங்கிவிட்டது. குறிப்பாக வெப்பமயமாகிசீதோஷ்ண நிலையில் பெரிய அளவில் மாற்றம் தெரிகிறது.அது வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு அளவை குறைக்க வேண்டும்நிலத்தை நஞ்சாக்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குதமிழக அரசு தடை விதித்தாலும் கடைகளில் இன்னமும்புழக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை தவிர்க்க அதிகஎண்ணிக்கையில் மரங்களை வளர்க்க வேண்டும்.சுற்றுப்புறச் சுத்தம், திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை, ஒலி, ஒளிமாசு ஏற்படாமல் இருப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.வீடுகளில் இடம் இருந்தால் மரங்கள், செடிகள்,காய்கறித் தோட்டம் அமைக்கலாம். வேளாண் மற்றும் காய்கறி சாகுபடியில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பரிந்துரைபடி பயன்படுத்த வேண்டும். துணிப்பை வழங்கும் திட்டத்தை ரேஷன் கடைகளில் செயல்படுத்தி குறைந்த விலையில் அரசு பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம், பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்கலாம்.சுத்தம், சுகாதாரம்வி.கே.ஜி. விஸ்வநாதன், தாளாளர், நாலந்தா இன்னோவேசன் பள்ளி , கம்பம்சுற்றுப்புறச்சூழல் மாசுபட்டு சுவாசிக்க சுத்தமான காற்று, குடிக்க சுத்தமான குடிநீர், ஆரோக்கியமான உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலை மாற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவிற்கு மரக்கன்று நடவு செய்ய வேண்டும்.அவை பல்வேறு இடங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. எங்கள் பள்ளியின் ஆரம்ப கல்வி முதல்மேல்நிலைக் கல்வி வரை, மாணவர்களுக்கு நாங்கள் சுத்தம், சுகாதாரம் குறித்து வலியுறுத்தி பயிற்றுவிக்கின்றோம். மாசில்லாத நிலை தான், நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்கும் என்பதே காரணம்.பசுமைப்போர்வை ஆர்.கே. செல்வக்குமார், இயற்கை ஆர்வலர், கம்பம். பருவம் தவறிய பருவமழை, அதிக பனி,கடுமையான வெப்பம், அதிக வறட்சிபோன்ற நிலைகள், சீதோஷ்ண நிலை மாற்றத்தால்ஏற்படுகிறது.நகரமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி நம்மை பலப்படுத்துவது போல்பலவீனப்படுத்தியும் வருகிறது. மனிதனின் சராசரி ஆயுள் குறைந்து வருகிறது.சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை தடுக்க ஒவ்வொருவரும் களம் காணவேண்டும். அதற்கு முன்பாக மாசுபட்டால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.மொத்தத்தில் பசுமைப்போர்வை உருவாக்க வேண்டும். மரக்கன்றுகள் நடுவதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement