Advertisement

அரிசி ஒதுக்கீடு குறைந்ததாக ரேஷன் பணியாளர்கள் புகார்

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன. மாதத்திற்கான அரிசி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் வீரராகவ ராவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

சங்க மாநில துணைத் தலைவர் தினகரன், மாவட்ட செயலாளர் ஞானசேகரன் தலைமையில் ரேஷன் கடை பணியாளர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஜன. மாதம் அரிசி ஒதுக்கீடு 100 சதவீதம் ஆரம்ப தேதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின், 70 முதல் 80 சதவீதமாக குறைத்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் விற்பனையாளராகிய நாங்கள் 100 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை கணக்கில் கொண்டு விற்பனை செய்து விட்டோம். பின், பொங்கல் பரிசு விநியோகம் செய்யும் போது 70 சதவீதமாக அரிசி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது தெரிய வந்தது.அதனால் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருள் விநியோகம் செய்யும் போது விற்பனையாளர்களுக்கும், மக்களுக்கும் இடையை வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே இந்த நிலை ஏற்படாத வகையில் மாதாந்திர அரிசி ஒதுக்கீட்டை 100 சதவீதமாக வழங்குமாறும், இனி வரும் மாதங்களில் இந்த நிலை தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி இருந்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement