Advertisement

கணக்கு எண் மாறியதில், கைமாறிய காசு! அதிகாரி அலட்சியம்; பெண் அதிர்ச்சி

Share
திருப்பூர்:பெண்ணுக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகை, 1.50 லட்சம் ரூபாய், தவறுதலாக குஜராத்தில் உள்ள ஒருவரின் வங்கி கணக்குக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பல்லடத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு, வழக்கு ஒன்றில், 1.50 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது இந்த தொகை, மாவட்ட ஆதி திராவிட நலத்துறை மூலம், சம்பந்தப்பட்ட பெண்ணின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
ஆனால், நிவாரணம் தொகை கிடைக்கவில்லை என, அப்பெண் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை அணுகினார். இதனால், குழப்பம் அடைந்த அலுவலர்கள், பெண்ணின் வங்கி கணக்கை சோதனை செய்தனர்.அதில், அப்பெண்ணின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டிய நிவாரண தொகை, குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு சென்றது தெரிந்தது. இதனால், அந்நபரை தொடர்பு கொண்டு இது குறித்து பேசி, பணத்தை திரும்ப அனுப்புமாறு அறிவுறுத்தினர்.ஆனால், அவர் தொடர்ந்து காலம் தாழ்த்தவே, அப்பெண், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செல்ல வேண்டிய நிவாரண தொகைக்கான விண்ணப்பம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக மாவட்ட கருவூலத்துக்கு சென்றது. அதன்பின், அப்பெண்ணின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டிய தொகை தவறுதலாக, ஒரு எண் மாறியதில், குஜராத்தில் உள்ள ஒருவரின் கணக்கில் சேர்ந்தது. இதுதொடர்பாக விசாரித்து வருகின்றோம்,' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement