Advertisement

குடிநீர் சப்ளை விவகாரம்

Share
அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, 18-வது வார்டு நெருப்பெரிச்சல் எஸ்.ஆர்.வி., நகரில் ஆறு வீதிகளில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில், 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் குறைவாக வருவதால் ஒரு வீட்டுக்கு ஐந்து குடம் குடிநீரே கிடைப்பதாக கூறப்படுகிறது. வீதியில் பொருத்தப்பட்டுள்ள நான்கு தெரு விளக்குகளும் பல மாதங்களாக எரியாமல் உள்ளது.அப்பகுதியிலுள்ள ஆறு வீதிகளில் இரண்டு வீதிகளில் மட்டுமே நான்காவது குடிநீர் திட்ட குழாய் பாதிக்கப்பட்டு வருகிறது. மற்ற நான்கு வீதிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது.இதனால், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி மா. கம்யூ., எஸ்.ஆர்.வி., நகர் கிளை நிர்வாகிகள் உட்பட, பொதுமக்கள், பூலுவபட்டியில் உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், பொதுமக்களை சமாதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement