Advertisement

பொங்கல் திருவிழா கல்லுாரியில் கலக்கல்

திருப்பூர்:திருப்பூர், குமரன் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் தலைமை வகித்தார். மாணவியர் பாரம்பரிய உடையான சேலைகளில் வந்து அசத்தியிருந்தனர். உறியடித்தல், கும்மி என கண்கவர் நிகழ்ச்சிகள் நடந்தன. துறை ரீதியாக பேராசிரியர்கள், மாணவியர் இணைந்து, 30க்கும் மேற்பட்ட பானையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தனர்.இது குறித்து, கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் கூறுகையில், ''கடந்த வாரம் முழுவதும் கல்லுாரியில் காவல்துறை தேர்வுகள் நடந்ததால் கல்லுாரி வளாகத்தில் பொங்கல் திருவிழா கொண்டாட முடியாமல் போனது. எனவே, இன்று (நேற்று) கொண்டாடினோம். மாணவியர் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்,'' என்றார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement