Advertisement

பாஸ்ட் டேக் முறை: டோல்கேட்டில் வாகனங்கள் காத்திருப்பு

திருப்புவனம்: -வாகன ஓட்டிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மத்திய அரசு 'பாஸ்ட் டேக்' முறையை கொண்டு வந்தது. இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் செல்ல வேண்டிய இடத்திற்கு கட்டணம் செலுத்த காத்து கிடக்க வேண்டியதில்லை. பாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யப்பட்டு வாகனத்தை ஓட்டி வருபவர்களிடம் 'ஆன்லைன்' மூலம் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. டிசம்பர் 15ம் தேதி பாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்ட கடைசி தேதி என அறிவித்திருந்த நிலையில், இதற்கான கால அவகாசம் ஜன., 15 வரை நீட்டிக்கப்பட்டது.

அதற்கு பின்னரும் பரமக்குடி, ராமநாதபுரம், கீழக்கரை, ராமேஸ்வரம் , இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை. இதனால் சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்துகிடக்கின்றனர்.அதே நேரம் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் தானியங்கி கதவுகள் மூலம் காத்திருக்காமல் விரைவாக சுங்க சாவடியை கடந்து செல்கின்றன.

திருப்பாச்சேத்தி சுங்க சாவடியில் நேற்று பாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டாத வாகன ஓட்டிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இருபுறமும் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருந்து வாகன ஓட்டிகள் பணம் செலுத்தி சுங்கசாவடியை கடந்து சென்றனர்.மத்திய அரசு இளையான்குடி, கீழக்கரை, பரமக்குடி ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாஸ்ட் டேக் சிஸ்டம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும், பாஸ்ட் டேக் ஸ்டிக்கர் வாங்க கூடுதல் மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement