Advertisement

33 சவரன், ரூ.13 லட்சம் இன்ஜினியர் வீட்டில் திருட்டு

கூடுவாஞ்சேரி;ஆதனுாரில், இன்ஜினியர் வீட்டில், 33 சவரன் நகைகள், 13 லட்சம் ரூபாய் திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, பரமணந்தல் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி மகன் சவுந்தர், 32; சிவில் இன்ஜினியர். தற்போது, கூடுவாஞ்சேரி அடுத்த, ஆதனுார் எம்.ஜி.நகரில் வசித்து வருகிறார்.பொங்கல் விழாவிற்காக, 15ம் தேதி, குடும்பத்தோடு, சொந்த ஊருக்கு சென்ற அவர், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.அப்போது, வீட்டின் பின்பக்க கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்தை கண்டார். உள்ளே, பீரோவிலிருந்த, 33 சவரன் நகைகள் மற்றும் 13 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது.தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் கை ரேகை நிபுணர்கள், வீட்டில் பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். சவுந்தர் அளித்த புகாரை அடுத்த, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement