Advertisement

காலண்டர் வெளியீடு; அரசு பள்ளி அசத்தல்

திருப்பூர்:பூலுவப்பட்டி, மாநகராட்சி துவக்கப்பள்ளி தொடர்ந்து ஐந்தாண்டுகளாக காலண்டர் வெளியிட்டு அசத்தி வருகிறது.மூடப்படும் நிலையில் இருந்த இப்பள்ளியில் தற்போது, 610 பேர் படிக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக 200க்கும் அதிகமான மாணவர் சேர்க்கையுடன் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.தனியார் பள்ளிகளை போலவே, 5 ஆண்டுகளாக விளையாட்டிற்கு வண்ண சீருடை, கணினி வகுப்பு, சிலம்பம், பரதம், கராத்தே, பறை, இசை, ஓவிய வகுப்புகள் கற்றுத்தரப்படுகிறது.ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. வீட்டுப்பாடங்களை பெற்றோர்க்கு எஸ்.எம்.எஸ்., மற்றும் டைரி மூலம் தகவல் அளிக்கின்றனர். தன்னார்வலர்கள் உதவியோடு, 1.50 லட்சம் செலவில் ஓவியங்களால் வகுப்பறைகளை வண்ணம் தீட்டியுள்ளனர்.தலைமை ஆசிரியர் ஜாஸ்மின் மாலா கூறியதாவது:எங்கள் பள்ளியின் சாதனைகளை குறிப்பிட்டு இந்தாண்டும் காலண்டர் வெளியிட்டுள்ளோம். மாணவர்களின் குழு புகைப்படம், பள்ளியின் சாதனைகளை இடம்பெற செய்துள்ளோம். அரசு பள்ளியின் பெருமைகளை அரசு பள்ளியே காலண்டரில் எடுத்துச்சொல்வது பெருமைக்குரிய விஷயம் என பெற்றோர்களே பாராட்டினர்.இதன்மூலம் பள்ளி குறித்த நன்மதிப்பை ஏற்படுத்த முடிகிறது. அடுத்தாண்டு மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரித்து, 700ஐ தொடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement