Load Image
Advertisement

பா.ஜ., தேசிய தலைவரானார் ஜே.பி.நட்டா

புதுடில்லி : பா.ஜ., தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, இன்றே அவர் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

Latest Tamil News

நாடு முழுதும், பா.ஜ.,வின், உட்கட்சித் தேர்தல்கள், பல மாதங்களாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு மாநிலங்களுக்கும், புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய அளவிலான தலைவர், பொதுச் செயலர் உட்பட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகளை, மூத்த தலைவர் ராதா மோகன்சிங் தலைமையிலான குழு, மேற்பார்வையிட்டு வருகிறது. டில்லியில், பா.ஜ., தலைமை அலுவலகத்தில், தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (ஜன.,20) நடந்தது. இதில் செயல் தலைவராக இருந்த ஜே.பி.நட்டா மட்டுமே மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, ஒருமனதாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

Latest Tamil News
நட்டாவின் பெயரை, பா.ஜ., ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், மாநில தலைவர்கள் வழிமொழிந்து, மனுக்கள் தாக்கல் செய்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சரும், இப்போதைய தலைவருமான அமித் ஷா ஆகியோர் முன்னிலையில், தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் இன்றே தலைவராக பொறுப்பேற்று, பணிகளை கவனிக்க உள்ளார். முதல் கூட்டமாக மாலை 4 மணிக்கு பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களை சந்தித்து நட்டா ஆலோசனை நடத்த உள்ளார்.


வாசகர் கருத்து (11)

  • முரட்டு தமிழன் - Tuticorin,இந்தியா

    Vazhtukkal

  • ஆல்வின், பெங்களூர் - ,

    திறமையானவர்களுக்கும், தேசப்பற்று உடையர்களுக்கும் பதவி பாஜகவை தவிர இந்தியாவில் யாருக்கும் கிடைக்காது. பாராட்டுக்கள் நட்டா.

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

    பேறு நட்டா இங்கே போட்டி போடுவது நோட்டாவிடம் இன்னொரு விபூதி பொட்டலம் முதல் பொட்டலம் ஷா

  • செந்தில் திருப்பூர் -

    நட்டா அவர்கள் தலைமையிலும் கட்சி வெற்றி கொடி நாட்ட வாழ்த்துக்கள்

  • Nepolian S -

    முகத்தில் அப்படியே தெரியிது....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்