Load Image
Advertisement

சக்கரக் கால்கள்! திருப்பூர் திரும்பிய தொழிலாளர்கள்:பின்னலாடை நிறுவனங்கள் சுறுசுறுப்பு

  சக்கரக் கால்கள்! திருப்பூர் திரும்பிய தொழிலாளர்கள்:பின்னலாடை நிறுவனங்கள் சுறுசுறுப்பு
ADVERTISEMENT
திருப்பூர்:பொங்கல் விடுமுறை முடிந்து, இன்று முதல், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள், மீண்டும் சுறுசுறுப்புடன் செயல்படத் துவங்குகின்றன. சொந்த ஊர்களில் இருந்து, வெளிமாவட்ட தொழிலாளர் பலர், திருப்பூர் திரும்பியுள்ளனர்.திருப்பூரில் உள்நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு; நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என பல்வேறு வகை ஜாப்ஒர்க் நிறுவனங்கள் உள்ளன.

இந்நிறுவனங்களில், வெளிமாநிலம், வெளிமாவட்ட தொழிலாளர் ஆறு லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.கடந்த 14ம் தேதி போகியுடன் துவங்கி, 15 முதல் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. பொங்கலுக்காக, 13ம் தேதி முதல் பின்னலாடை தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.வெளிமாவட்ட தொழிலாளர்கள் பலர், தங்கள் குடும்பத்தினருடன், பொங்கல் கொண்டாட சொந்த ஊர் புறப்பட்டனர். தொழிலாளர்களும், தொழில்முனைவோரும், குடும்பத்தினர், நண்பர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.இன்று முதல் பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் இயக்கத்தை துவக்குகின்றன. பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படும் நிலையில், குழந்தைகளின் கல்வியை கவனத்தில் கொண்டு, வெளிமாவட்ட தொழிலாளர்கள் பலர், திருப்பூர் திரும்பியுள்ளனர்.வடமாநில தொழிலாளர்கள், பொங்கல் விடுமுறையை, திருப்பூரிலேயே கழித்தனர்.

பின்னலாடை நிறுவனங்களில், இன்று, முதல்நாளிலேயே, 60 சதவீதத்துக்கும் மேல் தொழிலாளர் பணிக்கு திரும்பிவிடுவர்; இந்த வார இறுதிக்குள் அனைத்து தொழிலாளரும் திரும்பி விடுவர் என தொழில் துறையினர் கூறுகின்றனர்.

சக்கரக்கால்களைக் கொண்டவர்கள் போன் றும், இறக்கை முளைத்தவர்கள் போன்றும், சுறுசுறுப்புடன் பணிபுரிபவர்கள் என்ற பெயர் பெற்றவர்கள், திருப்பூர் தொழிலாளர்கள். எனவே, இன்று முதல் பின்னலாடை நிறுவனங்கள் சுறுசுறுப்புடன் இயங்கத் துவங்கிவிடும்!இதேபோல், பல்லடம் பகுதியில், விசைத்தறி உள்ளிட்ட தொழிற் கூடங்களில் பணிபுரியும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் பலர், சொந்த ஊரில் இருந்து, தாங்கள் பணிபுரியும் இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். எனவே, இதரத் தொழிற்கூடங்களும் இன்று முதல் சுறுசுறுப்படையும்.தை பிறந்தது... வழி பிறக்கிறது!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர் வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆடை தயாரிப்புக்கு ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. கடந்த கால மந்த நிலைகள் நீங்கி, பின்னலாடை துறை சுறுசுறுப்பு பெறும்; தேவையான எண்ணிக்கையில் தொழிலாளர் கிடைப்பர் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.பஸ்களில் கூட்டம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, 450 சிறப்பு பஸ்கள், 12 முதல், 14ம் தேதி வரை இயக்கப்பட்டது. பொங்கல் விடுமுறை நிறைவடைந்ததையடுத்து, நேற்று முன்தினம் முதல், பயணிகள் திருப்பூர் திரும்ப, சிறப்பு பஸ் இயக்கப்பட்டுள்ளது.நேற்றுடன் பொங்கல் விடுமுறை நிறைவு பெற்று, இன்று முதல் பள்ளி, கல்லுாரி, நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படுகிறது. நேற்று காலை முதல் சிறப்பு பஸ்களில் கூட்டம் அதிகரித்திருந்தது. சேலத்தில் இருந்து, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் வந்த பஸ்களில் பயணிகள் நிரம்பி வழிந்தனர்.

திருச்சி, கரூர் வழியாக புது பஸ் ஸ்டாண்ட் வந்த பஸ்களிலும் கூட்டம் நிறைந்திருந்தது.அதே நேரம், மதுரை, தேனியில் இருந்து திருப்பூர் திரும்பிய பஸ்களில், காலையில் அதிகளவில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை. போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பயணிகள் ஊர் திரும்ப வசதியாக, 17ம் தேதி முதல் சிறப்பு பஸ் இயக்கப்பட்டது. பயணிகள் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற வேகத்தில், திருப்பூர் திரும்புவதில்லை. நேற்று தான் பஸ்களில் அதிக கூட்டம் வந்தது. இன்று இரவு வரை தொடர்ந்து பஸ் இயக்கப்படும்,' என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement