Load Image
Advertisement

இது, தமிழ்நாடுதானா! எங்கு பார்த்தாலும் ஆங்கிலத்தின் ராஜ்ஜியம்:நம் தமிழ் மொழியின் வளர்ச்சியோ பூஜ்யம்!

  இது, தமிழ்நாடுதானா! எங்கு பார்த்தாலும் ஆங்கிலத்தின் ராஜ்ஜியம்:நம் தமிழ் மொழியின் வளர்ச்சியோ பூஜ்யம்!
ADVERTISEMENT
கோவை:இதோ கடந்து போய் விட்டது, மற்றுமொரு தமிழர் திருநாள். ஒவ்வொரு முறையும் தமிழர் திருநாளை விமரிசையாக கொண்டாடும் அரசு, இந்த பெருமைமிக்க மொழியின் வளர்ச்சிக்காக, என்ன செய்தது என்று பார்த்தால், பெரிதாக எதுவுமில்லை.

சரி, தமிழை வளர்க்க, அரசு ஏற்படுத்திய துறையினர்தான் என்ன செய்கின்றனர் என்று பார்த்தால் பூஜ்யம்தான்! இதன் விளைவு...கடை பெயர் பலகைகள், வழிகாட்டி பலகைகள், தெருக்கள்... இப்படி எங்கு காணினும் தமிழ் எழுத்துக்கள் மாயமாகி, விளக்கொளியில் மின்னுகிறது ஆங்கிலம்!தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து விதமான அலுவலகங்கள், கடைகளில் துாய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என, 1987ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.அவசியம் எனில், 5:3:2 என்ற அடிப்படையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் பெயர் இடம் பெறலாம் என, அந்த அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த அரசாணை, கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, 2017ம் ஆண்டு ஜூலையில், 'நான்கு மாதங்களில், தமிழில் பெயர் பலகை தொடர்பான அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்' என, தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.இருப்பினும், தற்போது வரை இந்த அரசாணை நடைமுறைக்கு வரவில்லை.'ஸ்டோர்ஸ்', 'பேக்கரி', 'மெடிக்கல் ஷாப்', 'சில்க்ஸ்', 'ஓட்டல்'...இப்படி ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுதி உள்ளனர்.

சிலர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளனர்.கடந்த ஆண்டு இவற்றை மாற்றி அங்காடி, அடுமணை, மருந்துக்கடை, பட்டு மாளிகை, உணவகம் என துாய தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று, தொழிலாளர் துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டு, அபராதம் விதிக்கப்பட்டும் இதுவரை, 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள், நிறுவனங்களில் அரசாணை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

'தமிழ்...தமிழ்' என மூச்சுக்கு முன்னுாறு முறை முழங்கும் அரசியல் கட்சியினரும், தமிழ் ஆர்வலர்களும், தமிழக அரசும் இது குறித்தெல்லாம் கவலைப்படுவதே கிடையாது.இதற்கென, 'தமிழ் வளர்ச்சித்துறை' என ஒரு துறையே செயல்படுவதுதான், இதில் உச்சகட்ட தமாஷ்!என்ன ஒரு பொறுப்பான பதில்!

தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குனர் அன்புச்செழியனிடம் கேட்டபோது, ''விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கடைகள், நிறுவனங்களில் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. மேற்கொண்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம், தொழிலாளர் துறை வசமே உள்ளது,'' என்றார்.

'அபராதம் விதித்துள்ளோம்'தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் வெங்கடேசனிடம் கேட்டபோது, ''அனைத்து கடைகள், நிறுவனங்களில் கட்டாயம் பெயர் பலகைகள், 5:3:2 என்ற அடிப்படையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்தே வைக்க வேண்டும். பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, அபராதம் விதித்துள்ளோம். 49 கடைகள் மீது, வழக்கு பதிவு செய்துள்ளோம். விதிமீறலுக்கு, 500 ரூபாய் மட்டுமே அபராதம் என்பதால், இதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அபராத தொகையை உயர்த்த, அரசுக்கு பரிந்துரை சமர்ப்பித்துள்ளோம்,'' என்றார்.


வாசகர் கருத்து (3)

  • Kundalakesi - Coimbatore,இந்தியா

    "அபராத தொகையை உயர்த்த, அரசுக்கு பரிந்துரை சமர்ப்பித்துள்ளோம்," - அதெல்லாம் வேண்டாம்ங்க. license ரத்து பண்ணிடவேண்டியது தான.

  • ஆப்பு -

    சந்தையில் எது விக்குமோ அந்த போர்டைத்தான் போடுவாய்ங்க. மேலும் தமிழகத்தில் கடை போடறவங்க பெரும்பாலோர் அண்டை மாநிலத்தவர், வடநாட்டவர். டாஸ்மாக் கடை போர்ட் மட்டும் தமிழில் இருந்தா போறும். தமிழன் குஷி.

  • chennai sivakumar - chennai,இந்தியா

    T N should implement the 2 language formula strictly in display boards. In my recent visit to jaipur etc hindi, hindi and only hindi in shops, buses, road names etc. I was very proud of our TN displaying all these in tamil and English. I can challenge no state you would find like this. Our Tamils are reasonably well versed in English too. But that doesnot mean thdh should avoid tamil display signs. There is no point in fining the establishments. This is a serious issue. I request the TN to take steps to restore tamil

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement