Advertisement

பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா

விருதுநகர்: விருதுநகர் விஸ்டம் வெல்த் இன்டர்நேஷனல் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. மாணவர்களும், ஆசிரியர்களும் பல குழுக்களாக பிரிந்து ஒரு கிராமத்தின் அங்கங்களையும் காட்சிப்படுத்தி இருந்தனர். மாட்டுவண்டி, பெட்டிக்கடை போன்றவை தத்ரூபமாக இடம்பெற்றிருந்தன. பள்ளி தாளாளர் திருச்செந்துாரான், செயலாளர் சிங்கார வேலன் தலைமை வகித்தனர். பள்ளி முதல்வர் மணிசுரேஷ் நன்றி கூறினார்.அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை ராமசாமி நகர் காந்தி வித்தியா பவன் பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. முதல்வர் விவேக் கவுதம் வரவேற்றார். பள்ளி சேர்மன்டி.ஆர். தினகரன் பேசினார். கட்டுரை, பேச்சு, மாறுவேடப் போட்டிகள் நடந்தன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement