Advertisement

இளவட்டகல் துாக்கும் போட்டி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் சமுதாய நல்லிணக்கபேரவை மற்றும் சேவா பாரதி அமைப்பின் சார்பில் தைப்பொங்கல் மற்றும் மாட்டு பொங்கலை சிறப்பிக்கும் வகையில் இளவட்டகல் துாக்கும் போட்டி மங்காபுரம் இந்து மேல்நிலைபள்ளி மைதானத்தில் நடந்தது.ஜெயராஜ் மற்றும் மகாலிங்கம் தலைமை வகித்தனர். சங்கரலிங்கம் வரவேற்றார். ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகிகள் சிவலிங்கம், மாரிச்சாமி பேசினர். இந்து அமைப்பு நிர்வாகிகள் ரவி, யுவராஜ் பங்கேற்றனர்.16 வயதிற்கு மேற்பட்ட 25 க்கு மேற்பட்டோர் 48 முதல் 88 கிலோ வரையிலான இளவட்ட கல்லை துாக்கினர். சமுதாய நல்லிணக்க பேரவை அமைப்பாளர் தாமரை கோவிந்தன் நன்றி கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement