Advertisement

வியக்க வைக்கும் கலை நுட்பம்

ராஜபாளையம்இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் பள்ளி கல்லுாரி கால கட்டத்தில் வீண் பொழுது போக்குகளோடு மனதை சிதறடிக்கும் எண்ணங்களில் ஆட்பட்டு வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக உண்மை தன்மை உணராமல் குழு மனப்பான்மையுடன் வீதிக்கு வருவதை விரும்புகின்றனர். இவர்களை வழிபடுத்துவதற்குள் பெற்றோர், ஆசிரியர்களுக்கு பெரும்பாடாகி விடுகிறது. இதிலும் சில இளைஞர்கள் விதிவிலக்காக உள்ளனர்.ராஜபாளையத்தை சேர்ந்த நகைக்கடை தொழிலாளி மகேஷ்பிரபு அத்தகையவர்களில் ஒருவர். அவரிடம் பேசுகையில், ''கல்லுாரியில் படிக்கும் போது படிப்பு, கைவினை பொருட்கள் செய்வதில் கல்லுாரி மாணவர்களில் மாவட்ட மற்றும் மாநில போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளேன்.வெள்ளியினால் கிரிக்கெட் விளையாட்டு மைதானம், பந்து, வாஷிங் மெஷின் சோப்பு கட்டி, சாக் பீஸ்களை வைத்து தையல் மெஷின் மனித உருவங்களை செய்துள்ளேன். மிக சிறிய அளவிலாக இருந்தாலும் பேட்டரி மூலம் சப்ளை கொடுத்து இயக்க நிலையில் அமைத்திருப்பது இதன் சிறப்பு.குறும் படங்களை இயக்கியதுடன் இன்றைய குழந்தைகளுக்கான கல்வி முறையை பற்றிய தலைப்பிலான படங்கள் முதல் பரிசு பெற்றது.துாக்கி எறிந்த பழைய மின்னனு சாதனங்களை வைத்து பல்வேறு கலைப்பொருட்களை செய்துள்ளேன். தற்போது நகை கடை வைத்துள்ளேன். தங்கத்திலும் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்றாலும் அதன் விலையேற்றத்தால் சாதனைகளை செய்ய முடியவில்லை. மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பொழுது போக்காக இது போன்ற கலைப்பொருட்களை செய்ய கற்றுத்தருகிறேன்,'' என்றார். இவரைபாராட்ட 63816 38324.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement