Advertisement

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை கிணற்றில் விழுந்து இறப்பு

Share
ஆலங்குடி:ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட காளை கிணற்றில் விழுந்து இறந்தது.

புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் ஜல்லிக்கட்டுபோட்டிகள் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன.இதில் மாந்தாங்குடியை சேர்ந்த மலையாண்டியின் காளை போட்டியில் கலந்து கொண்டு வாடிவாசலில் விடுபட்ட உடன் அங்கிருந்து தாறுமாறாக ஓடி மாந்தாங்குடியில் உள்ள புதர் மண்டிய கிணற்றில் தவறி விழுந்து கழுத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் இதுகுறித்து புதுக்கோட்டை தீயனைப்பு நிலையத்திற்கு
தகவல் கொடுத்தனர். அதை தொடர்ந்து தீயனைப்பு நிலைய அலுவலர் ராஜராஜ சோழன்
தலைமையில் தீயனைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது மாடு இறந்த நிலையில் இருந்தது. பின் கிணற்றில் விழுந்த மாட்டை மீட்டு வெளியே எடுத்து மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • ருத்ரா -

    தன் நிலை அறியாது ஒடியது. ஊக்க மது ?கைவிடேல் என்று ஓடியதா. வேதனை. கத்தியை கட்டிக் கொண்டு பந்தய சேவல்கள். கொடுமை.

  • ஜெய் ஸ்ரீ ராம் -

    வருத்தமளிக்கிறது. இதை வைத்து என்னுடன் வாதம் செய்வார்கள் உடன் பணி செய்யும் வடமாநிலத்தவர். ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித்தனம் என்று கூறுவர். நான் பாதுகாப்பாகத் தான் நடத்துகிறோம் என்று வாதிடுவேன். ஆனால் இன்னும் மாட்டுக்கு மது கொடுப்பது, சேவல் சண்டைக்கு காலில் கத்தி கட்டுவது, பந்தயத்தில் தோற்ற புறாக்களை கொல்வது. பந்தயம் கட்டி சூதாட்டம் என எல்லை மீறிக் கொண்டிருக்கிறோம். பார்வையாளர்களை விலக்கி வைத்து பாதுகாப்பு அரண் அமைத்து விலங்குகளுக்கும் யாருக்கும் தீங்கு இல்லாமல் விதிமுறைகளுடன் நடத்த வேண்டும். இல்லையென்றால் போராடி பெற்ற ஜல்லிக்கட்டை இழந்து விடுவோம்.

  • Jaya - Toronto,கனடா

    Poor bulls.. what sin they commited in their life?

Advertisement