Advertisement

சீனாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம்

Share
பீஜிங்: சீனாவில் கடந்த மூன்றாண்டுகளை ஒப்பிடும் போது 2019-ல் 14.65 மில்லியன் குழந்தைகளே பிறந்துள்ளது.

சீனாவில் கடந்த 1949-ம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலான காலகட்டத்தில் பிறப்பு விகிதம் குறைந்து வந்துள்ளது. வயதான சமூகம் அதிகரித்துள்ளதும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுத்தி இருப்பது மந்தமான பொருளாதாரத்தின் மீது அழுத்தத்தை குவிக்கும் என கூறப்படுகிறது.


சீனாவில் இரண்டு குழந்தைகளை பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த 2016-ம் ஆண்டு விலக்கி கொள்ளப்பட்டது. இருப்பினும் நாட்டின் மக்களிடையே எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

இது குறித்து சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த மக்கள் தொகை நிபுணர் ஒருவர் கூறியதாவது: நாட்டில் தினசரி செலவிற்கான விலை அதிகரித்து வருவதும் அதிக வாழ்க்கைச் செலவும் பிறப்பு விகிதம் குறைய காரணமாக இருக்கலாம். தற்போது குழந்தை பெற்று கொள்வதற்கு விதிக்கப்பட்டிக்கும் தடை நீக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு பகுதிகளில் இன்னும் மூன்று குழந்தைகள் பெறுவதற்காக தண்டிக்கப்படுகிறார்கள் என்றார்.கடந்த 1970 ல் ஒரு பெண்ணிற்கு சராசரியாக பிறப்பு விகிதம் 5.9 என்ற அளவில் இருந்தது. அதே நேரத்தில் 1990 களில் 1.6 ஆக குறைந்தது. தற்போதைய நிலையில் குறைந்து வரும் பிறப்பு விகித்தை கணக்கில் கொண்டால் வரும் 2050 களில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் அளவிற்கு குறையும் எனவும், மக்கள் தொகை பிரச்னை மெதுவான நீண்ட கால பிரச்னை என கூறி உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • பஞ்ச்மணி - கோவை,இந்தியா

  நீங்க ஒன்னியும் மெர்சல் ஆக வோணாம் நாங்க இங்க எதுக்கு இருக்கோம் நாங்க அந்த தேவையை பூர்த்தி செய்யறோம்

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  சீனா சரியான பாதையில் செல்கிறது. தீவிர வாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குகின்றது. ஆனால் இங்கு காங்கிரஸ், திமுக , திரிணமுல் போன்ற தேச விரோத சக்திகள் இந்தியாவை பின்னோக்கி இழுத்துக்கிட்டு இருக்கு . இந்தியாவை மொத்தம் மதம் மாத்தி ஆட்சி பிடிக்க திட்டம் . பங்களா தேஷ் ஆகவோ சோமாலியா ஆகவோ உருவாக்க பிளான் நடந்து கிட்டு இருக்கு. . ஏற்கனவே வத வதன்னு பெத்து தள்ளிக்கிட்டு தீவிர வாதிகளை உருவாக்கிக்கிட்டு இருக்கிறாங்க. விவசாயம் செத்துட்டு இருக்கு, வளர்ச்சி திட்டங்களை எல்லாம் தேச விரோத சக்திகள் வரவிடாம தடுத்திட்டு இருக்காங்க. அவனவன் வேலைக்கு அல்லாடிக்கிட்டு இருக்கான். இதில பங்களா தேஷ் ஆக்கிரமிப்பாளர்களுக்கு குடி உரிமை வேற வேணுமாம். இந்தியா சீனாவை பின் பற்ற வேண்டும். குடும்ப கட்டுப்பாடு கட்டாயம் ஆக்கப்பட வில்லையென்றால் சோத்துக்கு, தண்ணிக்கு, வீட்டுக்கு , வேலைக்கு ஆளாளாளுக்கு அடிச்சிக்கிட்டு சாக வேண்டியது வரும்.

 • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

  அதற்குள் சீனா பல வளரும் நாடுகளை வளைத்து விட்டிருக்கும் , அங்கிருக்கும் மனித சக்தியை ஆட்டிப்படைத்து சீனாதான் உலகின் வல்லரசு என்று ஆடிக்கொண்டிருக்கும்

 • Muruga Vel - Mumbai,இந்தியா

  சில மதங்களில் குடும்பக்கட்டுப்பாடு தடை விதிக்கப்பட்டுள்ளது ..ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்வது பொருளாதாரத்தை பாதிக்கும் ..

 • a natanasabapathy - vadalur,இந்தியா

  Angu indiyavaipol matham saathi saar thu yethuvume seyyappaduvathillai inku sirubaanmaiyinar yenra porvaiyil janathokaiyai alavillaamal athikarithu varukinranar

Advertisement