Advertisement

சி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா?: ராகுலுக்கு நட்டா சவால்

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : குடியுரிமை திருத்த சட்டம் பற்றி காங்., எம்.பி., ராகுலால் 10 வரிகள் பேச முடியுமா என பா.ஜ., செயல் தலைவர் ஜே.பி.நட்டா சவால் விடுத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. போராட்டத்தின் அடுத்த கட்ட குறித்து ஆலோசிப்பதற்காக சமீபத்தில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் கூட்டத்தை காங்., கூட்டியது. இதற்கிடையில் காங்., எம்.பி., ராகுலும், அவரது சகோதரியும் காங்., பொதுச் செயலாளருமான பிரியங்காவும் சிஏஏ விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக தாக்கி டுவிட்டரிலும், பேட்டியிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நட்டா, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 10 வரிகள் பேச வேண்டும் என ராகுலுக்கு நான் சவால் விடுகிறேன். சிஏஏ பற்றி எதுவும் தெரியாமல் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பேசுவது நாட்டிற்கு துரதிஷ்டவசமானது. சிஏஏ.,வை எதிர்ப்பவர்கள் நாட்டை பலவீனமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு நட்டடா கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (41)

  • வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா

    அப்பா, அம்மா யாரு -ன்னு தெரியுமில்ல ???? அப்புறம் என்ன கவலே:

  • Krishna - bangalore,இந்தியா

    BJP's Only Achievements-

  • Madhumohan - chennai,இந்தியா

    அப்பிடி இப்பிடி மனப்பாடம் பண்ணி பத்து வரி பேசிட்டார்னு வச்சுக்குவோம் .......அடுத்து 15 வரி பேச முடியுமான்னு சவால் விடுவீகளோ?

  • வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா

    முதலில் மோடி அமித்ஷா இவர்களை உட்காரவைத்து நேரலையா இந்த NPR FORM ஐ fillup பண்ண சொல்லுங்கள் அப்படி செயும்போது அவர்கள் எப்படி முழிக்கிறார்கள் எந்த எந்த தகவல் தவிர்க்கிறார்கள் என்று செய்தால் எல்லோரும் பயமின்றி பண்ணுவார்கள்

  • Balasubramanian - Bangalore,இந்தியா

    ஏன்யா வீண் வேலை சிஏஏ வேண்டாம், சிஏஏ கூடாது சிஏஏவை திரும்ப பெருக இப்படி எத்தனையோ வரிகள் பேசிவிட்டு போய் விடுவார்கள். சிஏஏ மூலம் நம் நாட்டில் குடியுரிமை பெறப்போவது சில ஆயிரம் பேர்வழிகள் என்றால், இவர்கள் எதிர்பால் நாடு இழப்பது பல்லாயிரம் கோடி(பொது சொத்துக்களை அழித்து வீணாக்குவது, மாணவர்களின் நேரத்தை, திறனை வீணடிப்பது, மற்றும் இயல்பு வாழ்க்கையை, உற்பத்தியை முடக்குவது போன்றவை) குட்டையை குழப்பி அதில் அரசியல் ஆதாயம் தேடும் இத்தகையவர்கள் இருக்கும் வரை நமக்கு விடிவே கிடையாது

Advertisement