Advertisement

சிஏஏவுக்கு எதிராக பஞ்சாப் தீர்மானம்

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேரளாவை தொடர்ந்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த சட்டத்தை எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் சட்டசபையிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தை கொண்டு வந்த அமைச்சர் மொகிந்திரா பேசுகையில், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தால், நாடு முழுவதும் போராட்டம், வன்முறை பரவி வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக இருக்கும் பஞ்சாப் மாநிலத்திலும் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
இதன் பின்னர், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக, கேரளாவிற்கு பிறகு தீர்மானம் நிறைவேற்றிய இரண்டாவது மாநிலம் பஞ்சாப் ஆகும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • GMM - KA,இந்தியா

  இந்தியா சுதந்திரம் பெற்ற பின், இலவசம், இட ஒதுக்கீடு.. போன்ற பல சலுகைகளால் சில மக்கள் குழு பெரும் பயன் அடைந்து வருகிறது. தேர்தலில்/அரசியலில் இவர்கள் விளையாட்டு அதிகம். இவர்கள் தான் CAA போன்ற பயனுள்ள சட்டத்தை எதிர்கிறரர்கள். மாநில சுய ஆட்சி, கலிஸ்தான் பிரிவினை வாதம்.... துவங்கும் போது மத்திய அரசு விழித்து இருக்க வேண்டும். ஒருவர் பிறந்தது முதல் அரசுக்கு ஒரு பைசா கூட வரி கட்டவில்லை. அரசு 60 வயது வரை அவருக்கு கோடிக்கணக்கான பணம் செலவு செய்து உள்ளது. இதனை வசூலிக்காவிட்டாலும் பராமரிக்க வேண்டும். பிரிவினை கேட்க, அரசை எதிர்க்க அச்சம் வரும். இன்று ஏழைகளால் கோடிக்கணக்கில் சினிமா, மதுபான விற்பனை நடக்கிறது. ஒருவர் இலவச கல்வி, மருத்துவ உதவி, சலுகை பிறருடைய வரி பணம் என்பதை அரசு உணர வேண்டும்.

 • வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா

  ஒரு நண்பர் :: குடியுரிமை பதிவு செய்யவில்லை என்று சொன்னால், ரேசன் கிடையாது என்று அறிவித்தால்:::: ரேஷன் வைத்து தான் பொழப்பு சேயும் சங்கிகளே அப்புறம் எப்போது இந்தியா வல்லரசு ஆகும் அனால் ஒன்று CAA வந்தால் உங்கள் ரேஷன் cut ஆகிவிடும் அதில் நீங்கள் உங்கள் உண்மையான வருமானத்தை கொடுக்க வேண்டி வரும் அப்போ சம்பளம் குறைத்து கொடுத்து ரேஷன் பெற்றது cut ஆகப்போகுது... யோசியுங்கள்

 • வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா

  உடனே பஞ்சாபி ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சி கொண்டு வாருங்கள் எப்படிஇப்படி தீர்மானம் போடலாம் இங்கே அடிமைகள் எவ்வளவு அடக்கமா உள்ளனர் அதை போல சொரணை இல்லாம இருக்கிறதா விட்டு இப்படி தீர்மானம்

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  CAA வை தங்கள் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துகிறார்கள் . தங்கள் இனத்தை சேர்ந்த மிகப்பெரிய சாமியாரை ஈவுஇரக்கமில்லாமல் குற்றவாளிக்கூண்டில் ஏற்றியவர்கள் அல்லது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை சும்மா விட்டுவிடுவார்களா ? இவை இரண்டுமே அரசியல் சட்டத்தின் அதில் உள்ளவர்களின் தான்தோன்றித்தனங்களுக்கு ஒரு உதாரணம் . CAA வில் எந்த தவறுமில்லை

 • blocked user - blocked,மயோட்

  சட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. குதிரை வெளியே ஓடிய பின்னர் லாயத்தை பூட்டி ஒரு பயனும் இல்லை.

Advertisement