Advertisement

2015 தேர்தல் வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு : பா.ஜ., முடிவு

Share
புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலில் 2015 ம் ஆண்டு போட்டியிட்ட வேட்பாளர்களையே மீண்டும் போட்டியிட வைக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டில்லி சட்டசபை தேர்தல் வரும் பிப்.,8 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் ஓட்டுக்கள் பிப்.,11 அன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் கடந்த முறை கைப்பற்றிய 67 தொகுதிகளை விட கூடுதல் இடங்களை கைப்பற்ற வேண்டும் என ஆளும் ஆம்ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது. மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பா.ஜ., மற்றும் காங்., கட்சிகள் தங்களின் வேட்பாளர் பட்டியலை இன்று (ஜன.,17) வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களையே இந்த முறையும் களமிறக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது பற்றி பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், கடந்த முறை போட்டியிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க 40 சதவீதம் வாய்ப்புள்ளது. 2015 தேர்தலில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்து பிரதமர் தலைமையிலான கட்சியின் மத்திய தேர்தல் குழு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதே போன்று சமீபத்தில் நடந்து முடிந்த டில்லி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பலரையும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வைக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2017 ல் பெற்ற தோல்வியில் இருந்து மீண்டு, டில்லியில் ஆட்சியை கைப்பற்ற பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது. பழைய வேட்பாளர்கள் மற்றும் கவுன்சிலர்கள் அடங்கிய பா.ஜ., வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படலாம் எனவும், இதில் எம்.பி.,க்கள் யாரும் போட்டியிடவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மூத்த அமைச்சர்கள், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களை வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய பயன்படுத்தவும் கட்சி திட்டமிட்டுள்ளவும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது தேர்தல் வெற்றிக்கு பிறகே முடிவு செய்யப்படும் என பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

    ஆம் ஆத்மீ என்ற சுத்தமும், பிஜேபி என்ற சாக்கடையும் காங்கிரஸ் என்ற தியாகமும் மும்முனையில் மோதுகிறது . நகரங்களில் சாக்கடை தேவையில்லாத ஒரு விஷயம் . ஓட்டுப்போடும் இயந்திரத்தை சேர்த்து காங்கிரஸ் அண்ட் AAP போட்டியிடவேண்டியுள்ளது

  • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

    இது ஒரு பெரிய சொதப்பல் . மற்ற மாநில முதலைவர்களை வீடு வீடாக போகச்சொன்னால் அந்தந்த மாநிலங்களில் இருந்து டெல்லியில் இருக்கும் மக்களை மட்டுமே கவரமுடியும் . அணைத்து டெல்லிவாசிகளையும் கவரமுடியாது. டெல்லிவாசிகளையே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வைத்தால்தான் முடியும் . இனியும் தன் ஆரம்பகால அடிமட்டத்தொண்டர்களுக்கு வாக்காளர்கள் மத்தியில் கணிசமான செல்வாக்கு உள்ளது என்பதை பிஜேபி உணரவேண்டும் . வெறும் அந்நியமோகத்தில் உள்ளவர்களை மட்டுமே தேர்தலில் வெற்றிபெறமுடியாது . அந்நிய மோகம், மோடி போன்ற உயர்மட்ட தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை . கீழ் மட்ட தலைவர்களும் எடுத்துக்கூற பயப்படுகிறார்கள் அல்லது ஏற்கனவே ஓரம் கட்டப்பட்டு விட்டார்கள் . இரண்டுக்கும் ஒரு பாலம் அமைத்து செயல்படவேண்டும் . ஒன்றில்லாமல், மற்ற ஒன்றைவைத்துமட்டும் இந்திய தேர்தலில் இன்றும் சாதிக்க முடியாது .

  • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

    நல்ல யோசனை.அறிவுள்ளவர்கள் மனித நேயமுள்ளவர்கள் அப்படித்தான் உதவிட நினைப்பர். தன்னைப்போல பிறரும் பயன் பெறனும் பாரதத்திற்கு பாடுபடனும் நேர்மையாக என்பதால் மீள வாய்யப்பு .......

Advertisement