Advertisement

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி : கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : நிர்பயா குற்றவாளி முகேஷின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.
டில்லியில் 2012 ம் ஆண்டு மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் 2 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு குற்றவாளியான ராமன் சிங் என்பவன் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். மற்ற 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து டில்லி கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால் தூக்கு தண்டனையை எதிர்ப்பு குற்றவாளிகள் தரப்பில் டில்லி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் ஆகியவற்றில் பலமுறை சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டும், அவைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் குற்றவாளிகளுக்கு வரும் ஜன.,22 அன்று காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என டில்லி கோர்ட் உத்தரவிட்டது. இதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வந்தது.
இதற்கிடையில் தூக்கு தண்டனையை எதிர்ப்பு குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் என்பவன் டில்லி அரசுக்கு கருணை மனு அளித்தான். இதனால் கருணை மனு மீது முடிவு எடுக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க டில்லி கோர்ட் நேற்று (ஜன.,16) உத்தரவிட்டது.

நிராகரிப்புஇந்நிலையில் கருணை மனுவை நிராகரிப்பதாக அறிவித்த டில்லி அரசு, அந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த மனுவை நேற்று இரவு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த உள்துறை அமைச்சகம், கருணை மனுவை நிராகரிக்கவும் பரிந்துரை செய்தது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, கருணை மனுவை நிராகரிப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இதனால் டில்லி கோர்ட் உத்தரவுபடி ஜன.,22 அன்று குற்றவாளிகள் 4 பேரும் தூக்கில் போடப்படுவது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

வரவேற்புகருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கு, நிர்பயா தரப்பு வழக்கறிஞர் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளார்.

அறை மாற்றம்இதனிடையே, குற்றவாளிகள் 4 பேரும், திஹார் சிறையில் அறை எண் 3க்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு தான், அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

நாங்கள் காரணமல்லடில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், நிர்பயா குற்றவாளிகளின் கருணை மனுக்கள் தொடர்பான பணிகளை ஒரிரு மணி நேரங்களில் நாங்கள் முடித்துவிட்டோம். இந்த வழக்கு தொடர்புடைய எந்த பணிகளையும் நாங்கள் தாமதபடுத்தவில்லை. தனது பணியை டில்லி அரசு முடித்துள்ளது. குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (25)

 • Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா

  குற்றவாளிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்கள் அந்த நிர்பயாவின் கனவுகளும் அவளுடன் சேர்த்து சிதைக்கப்பட்டதை எண்ணிப்பார்க்கவேண்டும் ......

 • மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா - Chennai,இந்தியா

  அதர்மத்தை அழிக்க கொலை தவறு இல்லைஎன்று பகவத் கீதை சொல்கிறது. இந்த 22 இல் உயிர் போகவில்லை என்றால் என்றாவது ஒரு நாள் போகத்தான் போகிறது. ஆகவே கருணை வேண்டாம் தர்மத்தை காப்பாற்றுங்கள். 'எங்க அப்பன் குதிருக்குள் இல்லை' என்பது போல் உள்ளது கெஜ்ரிவாலின் பதில்.

 • M.RAGHU RAMAN - chennai,இந்தியா

  இரெண்டுவருடத்தில் தூக்கில் போடவேண்டியது, இல்லையென்றால் இரெண்டுவருடத்தில் என்கவுண்டர் செய்யவேண்டியது. நாள்கடத்தியது வரவேற்கத்தக்கதல்ல.

 • rajesh -

  தூக்கு தண்டனையை நேரடி ஒளிபரப்பு செய்யணும்...... நம் நாட்டில் எவனுக்கும் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்யும் எண்ணம் அறவே எழக்கூடாது.... பாலியல் வண்புணர்வு என்ன என்று கேட்டால் அது திகார் ஜெயில் தூக்கு தண்டனை தான் நினைவிற்கு வர வேண்டும்

 • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

  இந்த வழக்குத் தொடர்பான பணிகளை ஒரிரு மணி நேரங்களில் நாங்கள் முடித்துவிட்டோம் என்று முதல்வர் கெஜ்ரிவால் அவர்கள் கூறியுள்ளார்கள். அவருக்குப் பாராட்டுக்கள்.இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற வழக்குகளை விரைவாக நடவடிக்கைகள் எடுத்து நீதியை விரைவில் நிலைநாட்ட உதவிட வேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

Advertisement