Advertisement

மோடி, அமித்ஷா மவுனம் ஏன்? ராகுல் கேள்வி

Share

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக டிஎஸ்பி தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமைதியாக இருப்பது ஏன் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.


இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:3 பயங்கரவாதிகளுக்கு, டிஎஸ்பி தேவிந்தர் சிங் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததுடன், அவர்களை டில்லிக்கு அழைத்து சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். விரைவு நீதிமன்றம் அமைத்து, 6 மாதங்களுக்குள் அவரிடம் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். அதில் அவர் குற்றவாளி என நிரூபணமானால், தேசதுரோகத்திற்காக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

மேலும், இதனுடன், போஸ்டர் ஒன்றையும் ராகுல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் எழுப்பியுள்ள கேள்விகள்,தேவிந்தர் சிங் கைது விவகாரத்தில், பிரதமர், உள்துறை அமைச்சர், தேசியபாதுகாப்பு ஆலோசகர் மவுனமாக இருப்பது ஏன்?
புல்வாமா தாக்குதலில், தேவிந்தர் சிங்கின் பங்கு என்ன?
இன்னும் எத்தனை பயங்கரவாதிகளுக்கு அவர் உதவி செய்துள்ளார்?
அவரை யார் பாதுகாத்தது & எதற்காக பாதுகாத்தனர்? இவ்வாறு அதில் கூறியுள்ளார்.ராகுல் சகோதரியும், காங்., பொது செயலாளருமான பிரியங்கா டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: காஷ்மீரில், தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்டிருப்பது, இந்தியாவின் தேசியபாதுகாப்பு குறித்து முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. அவரை இத்தனை நாள் கண்டுபிடிக்காமல் இருந்தது எப்படி என்ற சந்தேகம் எழுகிறது. வெளிநாட்டு தூதர்களை கவனித்து கொள்ளும் பணி உட்பட பல முக்கிய பணிகள் அவரிடம் அளித்துள்ளனர். அவர் யாருடைய உத்தரவின் கீழ் பணியாற்றினார். இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த உதவுவது தேசதுரோகம் ஆகும். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (44)

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  அபசல்குரு, தன்னுடைய வாக்குமூலத்தில் இந்த தேவிந்தர் சிங்க் சொல்லித்தான் தான் பாராளுமன்ற குற்றவாளிகள் என்று கூறப்படும் குற்றவாளிகளுக்கு வாடகைக்கு வீடுபிடித்து கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளது இங்கே கவனிக்க வேண்டியிருக்கு. அபசல்குருவுக்கு தண்டனை வழங்கியபோது கூட நேரடியான ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளதையும் சேர்த்து அரசு மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரிக்க முன்வருமா? தீவிரவாதிகள் உருவாக்கப்படுகின்றார்கள் என்ற தகவலோடு வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தீவிரவாதிகளால் யாருக்கு பயன் ஆகியுள்ளது என்ற கண்ணோட்டத்தில் விசாரணையை துரிதப்படுத்தினால் எதிர்காலத்தில் தீவிரவாதம் இல்லாத தேசம் என்பதற்கு நாம் முன்னோடி செல்லலாம். முதலில் இந்த தேவிந்தர் சிங்க்கிற்கு முழு பாதுகாப்பு கொடுத்து முழுமையான விசாரணையை நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு கவனித்து வரவேண்டும்.

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  வேடிக்கை மனிதன் ராகுல்

 • dandy - vienna,ஆஸ்திரியா

  இவன் உடலில் ஓடுவது ஈரானிய ரத்தம் ..மறு பாதி இத்தாலிய ரத்தம் ...ஆக..ஆக.. மார்க்கத்திற்கு துணை போவதில் வியப்பில்லை

 • natarajan s - chennai,இந்தியா

  நாட்டில் நடக்கும் அணைத்து கைதுக்கும் ஒரு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்பது என்ன நியாயம், இவர் அப்பா அப்படிதான் செய்தாரா அல்லது மௌனசிங் மும்பை குண்டு வெடிப்பின் பொது பதில் அளித்தாரா, சொல்லுங்கள் திரு ராகுல் அவர்களே .

 • madhavan rajan - trichy,இந்தியா

  உங்களுக்கு மக்கள் ஓட்டுப்போடவில்லை. நீங்கள் ஏதாவது புளுகி மக்கள் மனத்தை மாற்றி ஒட்டுப் போட வைக்கவேண்டியது அவசியம். பாஜகவை நம்பி மக்கள் ஒட்டுப் போட்டு விட்டார்கள். அவர்கள் செயலாற்றி மக்களின் மதிப்பை பெற்று மீண்டும் மக்களை ஒட்டுப் போட வைக்கவேண்டும். நீங்கள் பேசவேண்டும். அவர்கள் செயலில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தால் அவர்கள் பேசவேண்டிய அவசியமில்லை. நீங்கள் உங்களுக்கு ஆட்சி செய்ய கிடைத்த வாய்ப்பை ஊழலுக்கு துணை நின்று கோட்டை விட்டுவிட்டீர்கள். இப்போது அரசு செய்யும் அனைத்து செயலும் (அதில் பல திட்டங்கள் உங்கள் ஆட்சியில் திட்டமிட்டு நிறைவேற்றாமல் போனது) உங்களுக்கு தவறாக தெரிந்து அதை பற்றி நீங்கள் பேசினால் அதற்கு பதில் தரவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. ஏனென்றால் நீங்கள் மெஜாரிட்டி மக்களின் பிரதிநிதிகள் இல்லை. அவர்கள் செய்யும் செயலை (அது உங்களுக்கு பிடிக்காவிட்டாலும்) சீர்தூக்கி பார்த்து மக்கள் அடுத்த தேர்தலில் வாக்களித்து தங்களுடைய ஆதரவையோ அல்லது எதிர்ப்பையோ தெரிவிப்பார்கள். நீங்கள் சரியான செயல் செய்யவில்லை, இப்போது செய்யும் செயலுக்கு நீங்கள் எதிர்த்து பேசத்தான் முடியும். அதையும் செய்யவில்லை என்றால் உங்களை மக்கள் மறந்துவிடுவார்கள். அவர்கள் பேசவேண்டிய அவசியமில்லை. மக்களுக்கு நன்மை சென்று சேர்கிறதா என்று கவனித்தால் போதும். அதைத்தானே அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் பேசுங்கள். அவர்கள் செயலாற்றுவார்கள். மக்கள் மதிப்பீடு செய்வார்கள். உங்கள் அன்னை வழிகாட்டிய ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் கூட பேசாமல்தான் இருந்தார். அதுபோல இந்த பிரதமரும் இருந்துவிட்டுப்போகட்டுமே.

Advertisement