Advertisement

கால்வாயில் மீன்பிடித்த மக்கள்: கரையோரம் கமகமத்த குழம்பு

Share
மேட்டூர்: கால்வாயில், பாசன நீர் நிறுத்தப்பட்டதால், கரையோர மக்கள் மீன் பிடித்தனர்.
மேட்டூர் அணையிலிருந்து, கிழக்கு, மேற்கு கால்வாயில் ஆண்டுதோறும் ஆக., 1 முதல் டிச., 15 வரை திறக்கப்படும் நீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில், 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். கடந்தாண்டு, 12 நாள் தாமதமாக, ஆக., 13ல், கால்வாயில் பாசனத்துக்கு நீர் திறந்த நிலையில், நீர்திறப்பு, நேற்று முன்தினம் வரை நீட்டிக்கப்பட்டது. நேற்று காலை, 6:00 மணிக்கு, பாசன நீர் நிறுத்தப்பட்டதால், கால்வாயில் வெளியேறும் நீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இதைத் தொடர்ந்து, கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோர மக்கள், கால்வாயில் இறங்கி, வலைகளை வீசி மீன்பிடித்தனர். திலேப்பியா, ரோகு உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் சிக்கின. இதனால், கால்வாய் கரையோரமுள்ள பெரும்பாலான வீடுகளில், மீன்குழம்பு கமகமத்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement