Advertisement

மாட்டுப்பொங்கலையொட்டி ரூ.1 கோடிக்கு காய்கறி விற்பனை

சேலம்: சேலம் மாவட்டத்திலுள்ள உழவர் சந்தைகளில், 338 டன் காய்கறி, பழங்கள் மூலம், 1.06 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
மாட்டு பொங்கலையொட்டி, சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில், காய்கறி, பழம் வாங்க, நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. அதில், சேலம் மாநகரிலுள்ள சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி உழவர் சந்தைகளில், விவசாயிகள் கொண்டு வந்த, 181 டன், 944 கிலோ காய்கறி மூலம், 56 லட்சத்து, 13 ஆயிரத்து, 47 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அதேபோல், மாவட்டத்தில், ஆத்தூர், இடைப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி உழவர் சந்தைகளில், 156 டன், 525 கிலோ காய்கறி மூலம், 50 லட்சத்து, 37 ஆயிரத்து, 299 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. மாநகர், மாவட்டத்திலுள்ள,11 உழவர் சந்தைகளில், 338 டன், 469 கிலோ காய்கறி மூலம், 1.06 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. குறிப்பாக, செங்கரும்பு, மஞ்சள் கொத்து, பூ, இலைகள் அதிகளவில் விற்றதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement