Advertisement

சென்னையில் நடந்த மாநில தடகளம்: சேலம் மாணவ, மாணவியர் வெற்றி

Share
சேலம்: சென்னையில் நடந்த, மாநில அளவிலான தடகள போட்டியில், சேலம் மாணவ, மாணவியர் பதக்கங்களை குவித்தனர்.


சென்னை, நேரு பார்க்கில் கடந்த,10ல் பள்ளி மாணவ, மாணவியருக்கு இடையேயான தடகள போட்டிகள் நடந்தன. இதில், சேலம் பிட் பார் கிட்ஸ் பயிற்சி மையத்தில் சிறப்பு பயிற்சி பெறும், கிளேஸ் புரூக் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி தனுஸ்ரீ, 100, 200, 400 மீ., ஓட்டங்களில் முதலிடம் பெற்று தங்க பதக்கங்களை பெற்றார். சேலம், மூன்று ரோடு வித்யாமந்திர் பள்ளி மாணவன் முகம்மது சாகித், 50, 75 மீ., ஓட்டத்தில் இரண்டாமிடம், நோட்டரி டேம் பள்ளி மாணவன் உதயசங்கர், 100 மீ., ஓட்டத்தில் மூன்றாமிடம், குளுனி மெட்ரிக் குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி கார்த்திகாஸ்ரீ 75 மீ., 100 மீ., ஓட்டங்களில் முதலிடம் பெற்றார். சேஷா பள்ளி மாணவன் தனுஷிக்தேவ், 75 மீ., 100 மீ., ஓட்டத்தில் முதலிடம், பால பாரதி பள்ளி மாணவன் தரூண் குமார், 200 மீ., ஓட்டத்தில், இரண்டாமிடம் பெற்றனர். மொத்தம், 59 புள்ளிகளை பெற்ற பிட்பார் கிட்ஸ் பயிற்சி மாணவ, மாணவியர் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், மகாத்மா காந்தி மைதானத்தில், பிட் பார் கிட்ஸ் சிறப்பு பயிற்சியாளர் காமராஜ், பயிற்சியாளர்கள் ஸ்ரீதர், விக்கி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement