Advertisement

ஆட்டோ டிரைவர் கொலையில் ஒருவர் கைது

வேலூர்: வேலூரில், ஆட்டோ டிரைவர் கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வேலூர், சேண்பாக்கத்தை சேர்ந்தவர் பரத், 35; ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் காலை, 10:30 மணிக்கு வேலூர் மக்கானில் ஆட்டோவில் சென்றபோது, அவரை மர்ம நபர்கள் வழிமறித்து, இரும்பு ராடால் அடித்து கொலை செய்தனர். வேலூர் வடக்கு போலீசார் விசாரித்து, தோட்டப்பாளையத்தை சேர்ந்த, ஆட்டோ டிரைவர் உமாசங்கரை, 32, நேற்று கைது செய்தனர். ஆட்டோ டிரைவர்களான பரத், உமாசங்கர் ஆகியோருக்கு, வேலூரை சேர்ந்த, தாய், மகள் ஆகியோருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இந்நிலையில், கன்சால்பேட்டையில் பரத், புதியதாக வீடு கட்டி நேற்று முன்தினம் கிரகப்பிரவேசம் செய்தார். இதற்கு, தாய், மகளை அழைக்கவில்லை. இதை, உமாசங்கர் தட்டி கேட்டபோது, பரத் அவரை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த உமாசங்கர், பரத்தை அடித்துக்கொலை செய்தது, விசாரணையில் தெரியவந்தது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement